பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தன : முக்கிய நகரங்களின் விலை பட்டியல் இதோ...

Petrol, diesel price today: இந்த மாத இறுதிக்குள் முழு எண்ணெய் உற்பத்தி மீட்கப்படும் என்று சவுதி அரேபியா கூறியதால் கச்சா எண்ணெய்யின் விலை குறையலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தன : முக்கிய நகரங்களின் விலை பட்டியல் இதோ...

Petrol, diesel price today: எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயிக்கின்றன.

பெட்ரோல் டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் டெல்லி மற்றும் மும்பையில் பெட்ரோல்  விலை லிட்டருக்கு 25 பைசா அதிகரித்துள்ளதாக   இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டெல்லியில் லிட்டருக்கு  24 பைசா மும்பையில் லிட்டருக்கு 26 பைசா உயர்த்தப்பட்டது. கச்சா எண்ணெய்யின் விலை உயர்வினால் உள்நாட்டு பெட்ரோல் டீசல் விற்பனை விலையில் தொடர்ச்சியாக உயர்ந்துள்ளது.

 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அளித்த தகவலின்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 72.42 ஆகவும், மும்பையில் லிட்டருக்கு ரூ. 78.1 ஆகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75.14 ஆகவும் சென்னையில் லிட்டருக்கு 75.26 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

CityPetrol price (in rupees per litre)Diesel price (in rupees per litre)
Sep-18Sep-17Sep-18Sep-17
டெல்லி72.4272.1765.8265.58
கொல்கத்தா75.1474.8968.2367.99
மும்பை78.177.8569.0468.78
சென்னை75.2674.9969.5769.31
(Source: Indian Oil Corporation)

டீசல் விலையானது  டெல்லி மற்றும் மும்பையில் லிட்டருக்கு ரூ. 68.78ஆகவும், கொல்கத்தாவில் ரூ.67.99 ஆகவும், சென்னையில் ரூ. 69.31 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளை இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயிக்கின்றன. 

சர்வதேச கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் அந்நிய செலாவணி சந்தையின் அடிப்படையில்  பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நாள் விலையும் காலை 6 மணி முதல் செயல்படுத்தப்படும். 

இந்த மாத இறுதிக்குள் முழு எண்ணெய் உற்பத்தி மீட்கப்படும் என்று சவுதி அரேபியா கூறியதால் கச்சா எண்ணெய்யின் விலை குறையலாம். 

Listen to the latest songs, only on JioSaavn.com