Profit

தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறையும் என்ற அச்சத்தால் விலை அதிகரித்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு

பெட்ரோல் டீசல் விலை 16 முதல் 18 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது


ஹைலைட்ஸ்

  1. Diesel rates were raised by 0.16 paise in New Delhi, 0.17 paise in Mumbai
  2. Petrol prices were hiked by 0.17 paise in Kolkata, 0.18 paise in Chennai
  3. Crude prices rose on escalating concerns about potential supply shortages

ஒரு மாதத்துக்கும் மேலாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை, கடந்த 5 நாட்களாக உயர்த்தப்பட்டு வந்தது. இன்று ஆறாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் விலை டெல்லியில் 76.53 ரூபாயும், 79.20 ரூபாயாக கொல்கத்தாவிலும், சென்னையில் 79.43 ரூபாயாகவும், மும்பையில் 83.91 ரூபாயாகவும் உள்ளது.

டீசல் விலையை பொருத்தவரை டெல்லியில் 68.23 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 70.78 ரூபாயகவும், மும்பையில் 72.40 ரூபாயாகவும், சென்னையில் 72.03 ரூபாயாகவும் உள்ளது .

டெல்லியில் பெட்ரோல் விலை 17 பைசாவும், மும்பையில் 16 பைசாவும், கொல்கத்தாவில் 17 பைசாவும், சென்னையில் 18 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை டெல்லியில் 16 பைசாவும், மும்பையில் 17 பைசாவும், கொல்கத்தாவில் 16 பைசாவும், சென்னையில் 18 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

fvtsf9sypy

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறையும் என்ற அச்சத்தால் விலை அதிகரித்துள்ளது. நார்வே எண்ணெய் உற்பத்தி நிலைய ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரி, பணி நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதால், உற்பத்தி மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.3% உயர்ந்து 78.32 டாலர்களாக உள்ளது. இது நேற்று 1.2% உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மே 29-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை 36 நாட்கள் குறைந்து வந்தது. அப்போது பெட்ரோல் விலை 22 முறை குறைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 நாட்களாக விலை அதிகரித்தபடி இருக்கிறது.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top