தொடர்ந்து சரியும் எரிபொருள் விலை - சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ. 81.61

கச்சா எண்ணெயின் மதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன

தொடர்ந்து சரியும் எரிபொருள் விலை - சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ. 81.61

இன்று (5-11-2018) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நேற்றை விட சில காசுகள் மட்டுமே இன்று குறைந்துள்ளது.புதிய விலையின்படி, பெட்ரோல் லிட்டருக்கு டெல்லியில் 22 காசுகள் குறைந்து ரூ. 78.56-க்கும், கொல்கத்தாவில் 21 காசுகள் மட்டுமே குறைந்து ரூ. 80.47-க்கும், மும்பையில் 22 காசுகள் குறைந்து ரூ. 84.06-க்கும், சென்னையில் 23 காசுகள் குறைந்து ரூ. 81.61-க்கும் விற்பனையாகிறது.
டீசல்விலையை பொறுத்தளவில் டெல்லியில் 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ. 73.16-க்கும், கொல்கத்தாவில் 20 காசுகள் குறைந்து 75.02-க்கும், மும்பையில் 21 காசுகள் குறைந்து ரூ. 76.67-க்கும், சென்னையில் 21 காசுகள் குறைந்து ரூ. 77.34-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
 

Listen to the latest songs, only on JioSaavn.com