ஜூன் மாதம் 7 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு இருந்து வருகிறது.
ஹைலைட்ஸ்
- லாக்டவுன் போது பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை
- ஜூன் 7 முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன
- தொடர்ந்து 16 நாட்களாக எரிபொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன
பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தொடர்ந்து 16வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 33 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 59 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 16 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 9.21 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 8.55 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் 82.87 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் சென்னையில் 76.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் பரிந்துரைப்படி, இந்த விலை உயர்வு அமல் செய்யப்பட்டுள்ளது. ஓவ்வொரு மாநிலத்திற்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள், அந்த மாநிலத்தின் விற்பனை வரி விகிதத்தைப் பொறுத்து மாறுபடும்.
முக்கிய நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் (லிட்டருக்கு எவ்வளவு ரூபாய்?):
City | Petrol | Diesel |
---|
Delhi | 79.56 | 78.85 |
Kolkata | 81.27 | 74.14 |
Mumbai | 86.36 | 77.24 |
Chennai | 82.87 | 76.30 |
(Source: Indian Oil) |
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க லாக்டவுன் உத்தரவு அமல் செய்யப்பட்டபோது, 82 நாட்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நடைமுறை 16 நாட்களுக்கு முன்னர் விலக்கப்பட்டது. அப்போதிலிருந்துதான் இரண்டு எரிபொருட்களின் விலையும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகின்றன. ஜூன் மாதம் 7 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு இருந்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வை பெட்ரோல் மற்றும் டீசல் பெற்றுள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் வரி விகிதம் மட்டும் மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது. பெர்ரோலைப் பொறுத்தவரை சுமார் 64 சதவீதம், அதாவது சுமார் 50 ரூபாய் வரியாக பெறப்படுகிறது. டீசலைப் பொறுத்தவரை 63 சதவீதம், அதாவது சுமார் 49 ரூபாய் வரியாக வசூல் செய்யப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது சுங்க வரியை தலா 3 ரூபாய் உயர்த்தியது. மே மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியை தலா 10 ரூபாய் மற்றும் 13 ரூபாய் உயர்த்தியது மத்திய அரசு. இந்த இரண்டு விலை உயர்வினால் மட்டும் மத்திய அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வரி வருவாய் வந்தது.
இந்தியாவில் உள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டெட் ஆகியவைதான் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை தினமும் மாற்றியமைத்து வருகின்றன.