கட்டுக்கடங்காமல் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை - 83 ரூபாயை தாண்டியது பெட்ரோல்

பெட்ரோல் விலை, டெல்லியில் 79.99 ரூபாயும், மும்பையில் 87.39 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 82.88 ரூபாயும், சென்னையில் 82.13 ரூபாயாகவும் உள்ளது

பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. தினமும் விலை மாற்றம் செய்யத் தொடங்கியதில் இருந்து இது அதிகபட்ச உயர்வாகும். தினமும் புதிய வரலாற்றை உச்சத்தை அடைந்து வருகிறது.

சென்னையில் பெட்ரோல் விலை 83 ரூபாய்க்கு மேல் சென்றது. பெட்ரோல் விலை, டெல்லியில் 79.99 ரூபாயும், மும்பையில் 87.39 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 82.88 ரூபாயும், சென்னையில் 82.13 ரூபாயாகவும் உள்ளது.

டீசல் விலை டெல்லியில் 72.07 ரூபாயாகவும், மும்பையில் 76.51 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 74.92 ரூபாயகவும், சென்னையில் 76.17 ரூபாயாகவும் உள்ளது.

டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளதால், விலை வாசி உயர்வில் தாக்கம் ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்தது மத்திய அரசு. பெட்ரோல் மிதான கலால் வரி 19.48 ரூபாயாகவும், டீசலுக்கான கலால் வரி 15.33 ரூபாயாகவும், மத்திய அரசு வசூலித்து வருகிறது. விலை உயர்வை கருத்தில் கொண்டு கலால் வரி குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு, மத்திய அரசு முடியாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.

மக்கள் மீது சுமையை ஏற்றும் வகையில் பெட்ரோல், டீசல் இருப்பதை கண்டித்து எதிர்கட்சிகள் செப்டம்பர் 10-ம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

More News