
மும்பையில்தான் பெட்ரோல் மீது அதிகபட்சமாக 39.12% வாட் வரி விதிக்கப்படுகிறது
எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தியதால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டன. அதேநேரத்தில் கொல்கத்தாவில் மாநிலஅரசு கலால் வரியை குறைத்துள்ளதால் அங்கு மட்டும் ரூ. 1 குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 81-க்கு விற்பனையாகிறது.
மற்ற நகரங்களை பொறுத்தவரையில் மும்பையில் ரூ. 88.39, சென்னை ரூ. 82.41, கொல்கத்தாவில் ரூ.82.87 ஆக பெட்ரோல் விற்பனையாகிறது.
டீசலை பொறுத்தவரையில் டெல்லியில் ரூ. 73.58, மும்பையில் 77.58, சென்னையில் ரூ.77.25, கொல்கத்தாவில் ரூ. 74.93-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையாகிறது.
செப்டம்பரில் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் பெட்ரோல் டீசலின் விலை ஏற்றத்துடனேயே காணப்பட்டது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, அதிகளவில் விதிக்கப்படும் கலால் வரி, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோலை இந்தியா அதிகளவு இறக்குமதியின் மூலம் பெறுவதால், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவை அதிகம் பாதித்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளின் விலை, சர்வதேச சந்தையில் 15 நாட்களுக்கு இருக்கும் கச்சா எண்ணெய் விலையில் சராசரி மற்றும் ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.