Profit

84 ரூபாயை நெருங்கியது பெட்ரோல் விலை; ராஜஸ்தான் அரசு 4% வாட் வரியை குறைத்தது

விலை கடும் உயர்வடைய ரூபாய் மதிப்பு சரிந்ததும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததும் தான் காரணம் என்று கூறப்படுகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
84 ரூபாயை நெருங்கியது பெட்ரோல் விலை; ராஜஸ்தான் அரசு 4% வாட் வரியை குறைத்தது

பெட்ரோல். டீசல் விலை, தொடர்ந்து கடந்த 7 நாட்களாக தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. பெட்ரோல் விலை மும்பையில் 88 ரூபாயைத் தொட்டது. 

சென்னையில் பெட்ரோல் விலை 84 ரூபாயை நெருங்கியது. பெட்ரோல் விலை, டெல்லியில் 80.73 ரூபாயும், மும்பையில் 88.12 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 83.61 ரூபாயும், சென்னையில் 83.91 ரூபாயாகவும் உள்ளது.

டீசல் விலை டெல்லியில் 72.83 ரூபாயாகவும், மும்பையில் 77.32 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 75.68 ரூபாயகவும், சென்னையில் 76.98 ரூபாயாகவும் உள்ளது.

டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளதால், விலை வாசி உயர்வில் தாக்கம் ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். செப்டம்பர் 5-ம் தேதியைத் தவிர்த்து கடந்த சில வாரங்களாக அனைத்து நாட்களும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. 

விலை கடும் உயர்வடைய ரூபாய் மதிப்பு சரிந்ததும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததும் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநில முதல்வர், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 4% குறைத்துள்ளார். இதனால் அங்கு பெட்ரோல்,டீசல் விலை 2.5 ரூபாய் வரை குறையும். அதே நேரம், விலை உயர்வை கருத்தில் கொண்டு கலால் வரி குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு, மத்திய அரசு முடியாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Follow NDTV for latest election results and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top