பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது... மெட்ரோ நகரங்களின் விலைகளை தெரிந்து கொள்ளுங்கள்

இந்திய எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகியவை அன்றாடம் காலை 6 மணியளவில் எரிபொருள் விலையை நிர்ணயிக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது... மெட்ரோ நகரங்களின் விலைகளை தெரிந்து கொள்ளுங்கள்

டெல்லி, கொல்கத்தா, சென்னையில் 7 காசுகள் அதிகரித்துள்ளன

இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை உயர்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை 4 மெட்ரோ நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை டெல்லியில் ரூ. 72.92 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.74.94 ஆகவும், மும்பையில் ரூ. 78.49 ஆகவும் சென்னையில் ரூ. 75.68 ஆகவும் விற்கப்படுகிறது. பெட்ரோல் விலையில் 6 காசுகள் அதிகரித்துள்ளன. 

டீசல் விலை டெல்லியில் ரூ. 66.26 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.68.00 ஆகவும் மும்பையில் ரூ. 69.69 ஆகவும் சென்னையில் ரூ.69.96 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை டெல்லி, கொல்கத்தா, மற்றும் சென்னையில் 7 காசுகள் அதிகரித்தும் மும்பையில் 8 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.
 

ceps1qvo

இந்திய எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகியவை அன்றாடம் காலை 6 மணியளவில் எரிபொருள் விலையை நிர்ணயிக்கின்றன.

சர்வதேச அளவில் எரிபொருட்கள் சராசரியாக 15 நாள் அதிகரித்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்புக்குஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது, இந்திய நாட்டின் எரிபொருள் தேவைக்கு பெரும்பகுதி இறக்குமதியையே நம்பியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் குறைந்து 69.17ஆக உள்ளது. 

(With agency inputs)

Listen to the latest songs, only on JioSaavn.com