Profit

பெட்ரோல்,டீசல் விலை வரலாற்றில் இல்லாத அளவு உயர்வு!

டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளதால், விலை வாசி உயர்வில் தாக்கம் ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பெட்ரோல்,டீசல் விலை வரலாற்றில் இல்லாத அளவு உயர்வு!

Petrol is selling at a price of Rs 78.68 per litre and diesel at Rs 70.42 per litre in Delhi today.


சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் தொடர்ந்து 80 ரூபாய்க்கு மேலேயே இருக்கிறது. டெல்லியில் 78.68 ரூபாயும், மும்பையில் 86.09 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 81.60 ரூபாயும், சென்னையில் 81.75 ரூபாயாகவும் உள்ளது .
டெல்லியில் 70.42 ரூபாயாகவும், மும்பையில் 74.76 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 73.27 ரூபாயகவும், சென்னையில் 74.41 ரூபாயாகவும் உள்ளது.
நேற்று டீசல் விலை 28 பைசாக்கள் உயர்த்தப்பட்டது. இது ஓராண்டில் இது அதிகபட்ச உயர்வாகும். டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளதால், விலை வாசி உயர்வில் தாக்கம் ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததாலும், போக்குவரத்து எரிபொருள் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிகரித்ததாலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ejgv7ibo

நேற்று இந்திய ரூபாய் மதிப்பு 26 பைசாக்கள் குறைந்து 71 ரூபாய் என்று வரலாற்றில் இல்லாத சரிவை எட்டியது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் தீவிரமடையும் என்ற காரணத்தால் விலை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்தது மத்திய அரசு. பெட்ரோல் மிதான கலால் வரி 19.48 ரூபாயாகவும், டீசலுக்கான கலால் வரி 15.33 ரூபாயாகவும், மத்திய அரசு வசூலித்து வருகிறது.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top