This Article is From Jun 12, 2020

தொடர்ந்த 6வது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை - தற்போதைய விலை நிலவரம் என்ன?

Petrol, Diesel Rates: இந்தியாவின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் மாற்றியமைத்து வருகின்றன.

தொடர்ந்த 6வது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை - தற்போதைய விலை நிலவரம் என்ன?

கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்வதைத் தவிர்த்து வந்தன எண்ணெய் நிறுவனங்கள்.

கிட்டத்தட்ட 12 வாரங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக மீண்டும் எரிபொருட்களின் விலை உயர அரம்பித்தன. மீண்டும் தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று 6வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளன பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள். அதன்படி இன்று காலை 6 மணி முதல் பெட்ரோல் விலை சுமார் 57 பைசாவும், டீசல் விலை சுமார் 59 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன. 

இதன் அடிப்படையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 78.47 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல ஒரு லிட்டர் டீசலின் விலை 71.14 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைப் பட்டியல் (ஒரு லிட்டருக்கு எத்தனை ரூபாய் என்கிற அடிப்படையில்):

CityPetrolDiesel
Delhi74.5772.81
Kolkata76.4868.70
Mumbai81.5371.48
Chennai78.4771.14
(Source: Indian Oil)

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் சேகரிப்பு அதிகரித்த காரணத்தாலும், உலகளவில் தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாலும், சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 38.55 டாலருக்கு விற்கப்படுகிறது. முன்பைவிட இது 7.62 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் மாற்றியமைத்து வருகின்றன. இதில் விமானத்துக்குப் பயன்படுத்தப்படும் ஏடிஎஃப் எரிபொருள் மற்றும் எல்பிஜி எரிபொருள் அடங்காது. அதே நேரத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட நிலையற்றத் தன்மையால், கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்வதைத் தவிர்த்து வந்தன எண்ணெய் நிறுவனங்கள்.

நாட்டில் 90 சதவீத எண்ணெய் சப்ளையை இந்தியன் அயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களே தங்கள் வசம் வைத்துள்ளன.