
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.
நாட்டில் 82 நாட்களுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
கொரோனா பாதிப்பு, பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் 16-ம்தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 82 நாட்களில் முதன்முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 53 காசுகளும், டீசல் விலை 52 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தமட்டில், மே 3-ந் தேதி தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியில் மாற்றம் செய்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.
இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களாகும்.
நாட்டில் செயல்படும் 90 சதவீத சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்கள் இந்த மூன்றுக்கும் சொந்தமான என்பது குறிப்பிடத்தக்கது.