3 நாட்களுக்குப் பின்னர் குறைந்த பெட்ரோல், டீசல் விலை!

சீனாவைத் தாண்டியும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவிவருவதால், சர்வதேச பொருளாதாரம் பாதிப்படைந்து...

3 நாட்களுக்குப் பின்னர் குறைந்த பெட்ரோல், டீசல் விலை!

ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசலின் புதிய விலை அமலுக்கு வரும். 

Petrol, Diesel prices Today: இந்திய நகரங்களில், வியாழக்கிழமையான இன்று நேற்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையைவிட இன்று சற்றுக் குறைந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.74.75 பைசாவுக்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை, ரூ.68.27 பைசாவிற்கும் விற்கப்படுகிறது. 

பிப்ரவரி 26 ஆம் தேதி, காலை 6 மணி முதல் பின்பற்றப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம்:

CityPrice In Rupees Per Litre
PetrolDiesel
Delhi71.9664.65
Kolkata74.6066.97
Mumbai77.6267.75
Chennai74.7568.27
Bengaluru74.4166.84
Hyderabad76.4770.42
Ahmedabad69.4367.65
Pune78.0467.10
Visakhapatnam75.4469.38
Surat69.3367.57
Jaipur75.9769.75
(Source: iocl.com)

உள்ளூர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது, கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னியச் செலவாணி ஆகியவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசலின் புதிய விலை அமலுக்கு வரும். 

கடந்த 2019, ஜனவரி மாதத்திற்குப் பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து 5 நாட்களாக கச்சா எண்ணெய்யின் விலை சரிந்து வருகிறது.

சீனாவைத் தாண்டியும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவிவருவதால், சர்வதேச பொருளாதாரம் பாதிப்படைந்து, அதன் மூலம் எரிபொருள் தேவை குறைந்திருக்கலாம் என்று வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.

Listen to the latest songs, only on JioSaavn.com