தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்த பெட்ரோல் விலை

திங்களன்று சர்வதேச சந்தையில் பெட்ரோல் விகிதங்கள் மாறாமல் இருந்த போதிலும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விகிதங்கள் கடந்த இரண்டு மாதங்களை விட உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்த பெட்ரோல் விலை

டீசல் விலை 6வது நாளாக மாறாமல் உள்ளது

New Delhi:

பெட்ரோல் விலை தொடர்ந்து 5 வது நாளாக விலை உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் டீசல் விலை  6வது நாளாக மாறாமல் உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விகிதங்கள் உயர்ந்துள்ளதால் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. 

திங்களன்று சர்வதேச சந்தையில் பெட்ரோல் விகிதங்கள் மாறாமல் இருந்த போதிலும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விகிதங்கள் கடந்த இரண்டு மாதங்களை விட உயர்ந்துள்ளது. அதன்படி டெல்லி , மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 பைசா உயர்வைக் கண்டுள்ளது.

இந்திய ஆயில் வலைத்தளத்தின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு டெல்லியில் ரூ. 74.05, கொல்கத்தாவில் ரூ. 76.74 ஆகவும், மும்பையில் ரூ. 79.71 ஆகவும் மற்றும் சென்னையில் ரூ. 76.97ஆகவும் விற்கப்படுகிறது. 

தொடர்ச்சியாக ஆறு நாட்களாக மாறாமல் இருக்கும் டீசல் விலை லிட்டருக்கு டெல்லியில் ரூ.65.79 ஆகவும் மும்பையில் ரூ. 68.20 ஆகவும் கொல்கத்தாவில் ரூ. 69.01 ஆகவும் சென்னையில் ரூ. 69.54 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.05 சதவீதம்  குறைந்து ஒரு பீப்பாய் 63.31 டாலராக இருந்தது. இது கடந்த இரண்டு மாதங்களில் மிக உயர்ந்ததாகும். 

More News