This Article is From Sep 17, 2018

கர்நாடகாவில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு

மாநில அரசு மேற்கொண்டுள்ள விலை குறைப்பு நடவடிக்கையால் நுகர்வோருக்கு சிறிதளவு நிம்மதி கிடைக்கும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்

கர்நாடகாவில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு

நாட்டின் பல நகரங்களில் எரிபொருளின் விலை உயர்ந்துள்ளது

மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் திங்கள் கிழமையான இன்று கர்நாடக அரசு விலைக்குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அங்கு மட்டும் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நுகர்வோர் சிறிதளவு நிம்மதி அடைவார்கள் என்று முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ ஒவ்வொரு நாளும் எரிபொருளின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. வரியை குறைப்பதன் மூலம் எரிபொருளின் விலையை மாநில அரசால் குறைக்க முடியும் என்று கர்நாடக மக்கள் நம்புகின்றனர். இதனால் பெட்ரோல் டீசல் விலையை குறைந்தபட்சம் ரூ.2 குறைத்து அறிவிப்பு வெளியிடுகிறேன். கூட்டணி அரசின் இந்த நடவடிக்கை கர்நாடக மக்களுக்கு நிச்சயம் பலன் அளிக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆந்திர மற்றும் ராஜஸ்தான் அரசுகள் முறையே பெட்ரோல் டீசலுக்கு ரூ. 2 மற்றும் ரூ. 2.5-ஐ குறைத்தன. இதன் தொடர்ச்சியாக கர்நாடக அரசு தற்போது விலைக்குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

பெட்ரோல் விலை நிலவரம் – டெல்லி ரூ. 82.06, கொல்கத்தா ரூ. 83.91, மும்பை ரூ. 89.44, சென்னை ரூ. 85.31, பெங்களூரு ரூ. 84.74.

டீசல் விலை நிலவரம் – டெல்லி ரூ. 73.78, கொல்கத்தா ரூ. 75.63, மும்பை ரூ. 78.33, சென்னை ரூ. 78, பெங்களூரு ரூ. 76.16.

.