12 நாட்களுக்கு பின்னர் குறைந்த பெட்ரோல் விலை - சென்னையில் 22 காசுகள் குறைப்பு

பெட்ரோல் விலையில் டெல்லியில் 21 காசுகளும், மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் 22 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. டீசல் விலையில் 11 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன

12 நாட்களுக்கு பின்னர் குறைந்த பெட்ரோல் விலை - சென்னையில் 22 காசுகள் குறைப்பு

குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கிடையே பண்டிகை காலம் வருவதையொட்டி, பெட்ரோல் விலையில் குறைப்பு செய்து எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

நேற்று பெட்ரோல் விலை டெல்லியில் ரூ. 82.83-க்கும் கொல்கத்தாவில் ரூ. 84.65-க்கும், மும்பையில் ரூ. 88.29-க்கும், சென்னையில் ரூ. 86.10-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று டெல்லியில் 21 காசுகளும், மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் 22 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.

விலைக்குறைப்பின்படி டெல்லியில் பெட்ரோல் விலை ரூ. 82.62-க்கும், கொல்கத்தாவில் ரூ. 84.44-க்கும், மும்பையில் ரூ. 88.08-க்கும் சென்னையில் ரூ. 85.88-க்கும் விற்பனையாகிறது.

இதேபோன்று டீசல் விலையிலும் 11 காசுகள் விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய விலையின்படி டீசல் லிட்டருக்கு டெல்லியில் ரூ. 75.58-க்கும், கொல்கத்தாவில் ரூ. 77.43-க்கும், மும்பையில் ரூ. 79.24-க்கும், சென்னையில் ரூ. 79.83-க்கும் விற்பனையாகிறது.

3ji0prj4

ரூபாய் மதிப்பை பொறுத்தவரையில் நேற்றைய சந்தையின் முடிவின்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 73.61- ஆக இருந்தது.

நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடந்த 5-ம் தேதி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ரூ. 2.50 விலைக் குறைப்பு செய்யப்பட்டது. அதன்பின்னர் பல மாநில அரசுகள் விலைக்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

Listen to the latest songs, only on JioSaavn.com