பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைந்தது - சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 84.02

எரிபொருள் விலையில் செய்யப்படும் புதிய விலை மாற்றங்கள் தினமும் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது

பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைந்தது - சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 84.02

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனை குறைந்து வருகிறது. ///

சனிக்கிழமையான இன்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. புதிய விலையின்படி, டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 80.85-க்கும், கொல்கத்தாவில் ரூ. 82.71-க்கும், மும்பையில் ரூ. 86.33-க்கும், சென்னையில் ரூ. 84.02-க்கும் விற்பனையாகிறது. 

டீசல்விலையை பொறுத்தளவில் டெல்லியில் டீசல் லிட்டருக்கு ரூ. 74.73-க்கும், கொல்கத்தாவில் 76.58-க்கும், மும்பையில் ரூ. 78.33-க்கும், சென்னையில் ரூ. 79.02-க்கும் விற்பனையாகிறது.

ckjcc85o

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. 

15 நாட்களுக்கு ஒருமுறை செய்து வரப்பட்ட இந்த மாற்றம், கடந்த ஆண்டு ஜூன் மாத மத்தியில் தினந்தோறும் மாற்றம் செய்யும்படி கொண்டு வரப்பட்டது. 
 

Listen to the latest songs, only on JioSaavn.com