எரிபொருள் விலை நிலவரம் - இந்தியாவில் டீசல் பயன்பாடு கணிசமாக குறைந்தது

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை இன்றைக்கும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன

எரிபொருள் விலை நிலவரம் - இந்தியாவில் டீசல் பயன்பாடு கணிசமாக குறைந்தது

கடந்த 4-ம்தேதி பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 2.50 குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி அளித்ததால் கடந்த 4-ம் தேதி எரிபொருள் விலையில் ரூ. 2.50-ஐ குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இதற்கு பின்னர் எரிபொருளின் விலை தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து வருகிறது. ஞாயிற்றுக் கிழமையான இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு டெல்லியில் ரூ. 82.72-க்கும், மும்பையில் ரூ. 88.18-க்கும், சென்னையில் ரூ. 85.99-க்கும் கொல்கத்தாவில் ரூ. 84.54-க்கும் விற்பனையாகிறது.

டீசல் விலையை பொறுத்தளவில் டெல்லியில் லிட்டருக்கு ரூ. 75.38-க்கும், மும்பையில் ரூ. 79.02-க்கும், சென்னையில் ரூ. 79.71-க்கும், கொல்கத்தாவில் ரூ. 79.71-க்கும் விற்பனையாகிறது.

எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு மாதாந்தி டீசல் உபயோகம் குறைந்திருக்கிறது. மொத்த எரிபொருளில் டீசலின் பங்கு 40 சதவீதம் ஆகும். இதன் பயன்பாட்டில் 0.8 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.