Profit

வரலாற்று உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை - 10-வது நாளாக உயர்வு

டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளதால், விலை வாசி உயர்வில் தாக்கம் ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS

பெட்ரோல், டீசல் விலை இன்றும் வரலாற்றில் இல்லாத உச்சத்தை தொட்டது. எண்ணெய் நிறுவனங்கள் இன்று பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 10-வது நாளாக உயர்த்தியுள்ளன. நேற்றும், புதிய வரலாற்று உச்சத்தை தொட்ட நிலையில், இன்று இன்னும் அதிகரித்து மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் 82 ரூபாய்க்கு மேல் சென்றது பெட்ரோல் விலை. டெல்லியில் 79.31 ரூபாயும், மும்பையில் 86.72 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 82.22 ரூபாயும், சென்னையில் 82.41 ரூபாயாகவும் உள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை டெல்லியில் 71.34 ரூபாயாகவும், மும்பையில் 75.74 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 74.19 ரூபாயகவும், சென்னையில் 75.39 ரூபாயாகவும் உள்ளது.

டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளதால், விலை வாசி உயர்வில் தாக்கம் ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். 

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 பைசாக்கள் சரிந்து 71.37 ரூபாயை தொட்டு வரலாற்றில் இல்லாத சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது காரணமாகவும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது. 
சர்வதேச அளவில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தக போர் விரைவில் தீர்க்கப்படாவிடில், கச்சா எண்ணெய் விலை இன்னும் அதிகரிக்கும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top