டெல்லியில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

டெல்லியில் வாடிக்கையாளர்கள் தற்போது, பெட்ரோலுக்கு ரூ.71.26, டீசலுக்கு ரூ.69.39ம் செலுத்தி வருகின்றனர்.

டெல்லியில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

டெல்லியில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

தலைநகர் டெல்லியில் எரிபொருட்களுக்கான மதிப்பு கூட்டு வரியை அரசு உயர்த்தியதால், இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.67ம் டீசலுக்கு ரூ.7.10ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் வாடிக்கையாளர்கள் தற்போது, பெட்ரோலுக்கு ரூ.71.26, டீசலுக்கு ரூ.69.39ம் செலுத்தி வருகின்றனர். பல்வேறு தளர்வுகளுடன் 3வது கட்ட ஊரடங்கின் 2வது நாளான இன்று முதல் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

எரிபொருள் விலை என்பது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதன் உள்ளூர் வரி அடிப்படையில் மாறுபடுகிறது. 

டெல்லியில் இன்று பெட்ரோல் சந்தை விலை கலால் வரி உட்பட சேர்த்து, லிட்டருக்கு ரூ.22.98 மற்றும் மதிப்பு கூட்டு வரி (டீலர் கமிஷன் வரி உட்பட) லிட்டருக்கு ரூ.16.44.

இதேபோல், கலால் வரி உட்பட சேர்த்து டீசல் சந்தை விலை ரூ.18.83 மற்றும் மதிப்பு கூட்டு வரி லிட்டருக்கு ரூ.16.26 ஆகும். 

இதுதொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர கூறும்போது, கொரோனா வைரஸ் பரவுவதைக் கொண்ட பகுதிகளில் தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை அதிகாரிகள் எளிதாக்குவதால் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரிக்கும்.