பேடிஎம் மாலில் கேஷ்பேக் ஆஃபரில் 5 முதல் 10 கோடி வரை மோசடி

எங்களின் தொடர்ச்சியான வேலைகளினால் நம்பகமான வியாபார தளத்தை கட்டியெழுப்ப கடமைப்பட்டுள்ளோம். தேவைப்படுகிற இடத்தில் கண்டிப்பான நடவடிக்க எடுக்கப்படும் என்று மோத்தே தெரிவித்தார்.

பேடிஎம் மாலில் கேஷ்பேக் ஆஃபரில்  5 முதல் 10 கோடி வரை மோசடி

பேடிஎம்மின் சந்தை பங்கு 2018 ஆண்டில் பாதியாக குறைந்து விட்டது

ஹைலைட்ஸ்

  • இ&ஒய் உடன் பேடிஎம் பங்குதாரர் ஆகியுள்ளது.
  • பேடிஎம்மின் சந்தை மதிப்பு பாதியாக குறைந்துள்ளது.
  • 2017-18 நிதியியல் ஆண்டின் நஷ்டம் 1800 கோடியாகும்.
New Delhi:

பேடிஎம் மால் வழங்கப்பட்ட கேஷ் பேக் ஆஃபரில் மோசடி நடந்துள்ளதாக பேடிஎம் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். 5-10 கோடி வரை பண மோசடி நடந்திருக்கலாம் என்று அதனால் ஆழ்ந்த தணிக்கைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்த தணிக்கையில் பல ஊழியர்கள்  ஜூனியர் ஊழியர்களூடன் கூட்டு வைத்துள்ளது தெரியவந்துள்ளது. 

பண மோசரி ரூ. 5-10 கோடி வரையில் உள்ளது என்று செய்தி தொடர்பாளர் ஐஏஎன்எஸ்க்கு தெரிவித்தார். 

பேடி எம்மின் நிறுவனர் சி இ ஓ விஜய்சேகர் ஷர்மாவின் சிந்தனையாக இ- காமர்ஸ் தளத்தின் 2018 ஆம் ஆண்டின் நஷ்டங்கள் கிட்டத்தட்ட ரூ. 1800 கோடியாகும். வருவாய் 774 கோடியாகும். 

ஃபாரெஸ்டர் ஆராய்ச்சி படி பேடிஎம்மின் சந்தை பங்கு 2018 ஆண்டில் பாதியாக குறைந்து விட்டது. 2017இல் 5.6 சதவீதமாக இருந்தது தற்போது 3 சதவீதமாக உள்ளது. 

“எங்களின் செயற்பாடுகளை அளவிடுவதற்கு தொழில்நுட்ப ரீதியான மோசடி  தடுப்பு முறையை உருவாக்க இ&ஒய் ( E&Y) யுடன் பங்குதாரராக ஆகியுள்ளோம். இதனால் சிறந்த நடைமுறைகள் எதிர்பார்க்க முடியும்” என்று மூத்த துணைத் தலைவரான ஶ்ரீனிவாஸ் மோத்தே அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

எங்களின் தொடர்ச்சியான வேலைகளினால் நம்பகமான வியாபார தளத்தை கட்டியெழுப்ப கடமைப்பட்டுள்ளோம். தேவைப்படுகிற இடத்தில் கண்டிப்பான நடவடிக்க எடுக்கப்படும் என்று மோத்தே தெரிவித்தார்.

நிர்வாகம், நிதி மற்றும் பிற ஆதரவுப் பணிகளைத் தவிர நிறுவனம் ஒரு வியாபார நடவடிக்கை குழுவைக் கொண்டுள்ளது. வணிகர்ளுடன் நெருக்கமாக பணியாற்றி சலுகைகள் வழங்க செயல்படுத்துவோம் என்றார். 

பேடிஎம் மற்றும் இ &ஒய் கூட்டணி தணிக்கை மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மோசடி தடுப்பு மேற்கொள்ளப்படும் என்று பேடிஎம் தெரிவித்துள்ளது. 

பேடிஎம் 650 மில்லியன் டாலர் வரை முதலீட்டினை அலிபாபா, சாஃப்ட் பேங்க், மற்றும் சாயிஃப் முதலீட்டாளர்களுடன் இணைந்து உயர்த்தியுள்ளது. 

More News