This Article is From May 30, 2018

பதஞ்சலி சிம் கார்டு-ஐ அறிமுகம் செய்தார் பாபா ராம்தேவ்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தொலை தொடர்பு நிறுவனத்தில் கால் பதித்ததில் இருந்து பல அதிரடி ஆஃபர்களை அறிமுகம் செய்து வருகிறது

பதஞ்சலி சிம் கார்டு-ஐ அறிமுகம் செய்தார் பாபா ராம்தேவ்!

புதிய ரீசார்ஜ் பேக்குகளுடன் சிம் கார்டு-ஐ அறிமுகம் செய்துள்ளது பதஞ்சலி-பிஎஸ்என்எல்

ஹைலைட்ஸ்

  • மூன்று வித ரீசார்ஜ் பேக்குகளுடன் இந்த சிம் கார்டு வருகிறது
  • ஸ்வதேஷி சமரித்தி சிம் கார்டு என்று இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது
  • சீக்கிரமே இந்த சிம் கார்டுகள் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும்

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், இந்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கூட்டு வைத்து புதிய சிம் கார்டு-ஐ வெளியிட்டுள்ளது. இதற்கு `ஸ்வதேஷி சமரித்தி சிம் கார்டு' என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஏற்கெனவே உணவு, காஸ்மெடிக்ஸ் என்று பல துறைகளில் சந்தையின் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள பதஞ்சலி, இந்த புதிய திட்டத்தின் மூலம் தொலைதொடர்பு துறையிலும் காலெடுத்து வைக்கிறது. 

இந்த சிம் கார்டின் அனைத்து ரீசார்ஜ் பேக்குகளும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடனும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியுடனும் வருகிறது. 

ஆனால், 144 ரூபாய் மதிப்புள்ள ரீசார்ஜ் பேக்-ன் வேலிடிட்டி 30 நாட்களுக்கு மட்டுமே. 792 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 6 மாதங்கள் வேலிடிட்டி பெற முடியும். 1584 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1 ஆண்டுக்கு வேலிடிட்டி பெறலாம். 

கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த புதிய சிம் கார்டுகளை அறிமுகம் செய்தார் யோகா குரு ராம்தேவ். இந்த சிம் கார்டுகள் தற்போது பதஞ்சலி ஊழியர்களுக்கு மட்டும் விநியோகிக்கப்பட உள்ளன. சீக்கிரமே பொது மக்களுக்கும் இந்த சிம் கார்டுகள் கிடைக்கப் பெறும் என்று இரு நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தொலை தொடர்பு நிறுவனத்தில் கால் பதித்ததில் இருந்து பல அதிரடி ஆஃபர்களை அறிமுகம் செய்து வருகிறது. இதனால், மற்ற போட்டி நிறுவனங்களும் ஆஃபர்கள் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. ஏற்கெனவே மிகப் பெறும் போட்டி நிறைந்ததாக பார்க்கப்படும் தொலைதொடர்பு துறையில், பதஞ்சலி அடியெடுத்து வைத்துளதை பலரும் வியப்புடனேயே பார்த்து வருகின்றனர். மேலும், ஆரம்பிக்கும் போதே பல அதிரடி ரீசார்ஜ் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளதும் கவனம் பெற்றுள்ளது. 

.