Profit

இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி 10,000 தொழிலாளர்களை பணி நீக்க வாய்ப்பு

2017 ஆம் ஆண்டு முதல் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியினால் ஒவ்வொரு பிஸ்கட்டிற்கு ரூ. 5 வரியாக கட்ட வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி 10,000 தொழிலாளர்களை பணி நீக்க வாய்ப்பு

இது கிராமப்புற இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட நுகர்வோரின் தேவையை குறைத்துள்ளது


Bengaluru: 

ஹைலைட்ஸ்

  1. இங்குள்ள நுகர்வோர்கள் விலையில் தான் மிகவும் கவனமாக உள்ளனர்
  2. பொருளாதார மந்த நிலை உற்பத்தியில் சரிவை ஏற்படுத்தியது
  3. பார்லே ஜி நிறுவனத்தில் 1,00,000 பேர் பணிபுரிகின்றனர்

இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே புராடக்டஸ் பிரைவேட் லிமிடெட் 10,000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடும். ஏனெனில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதோடு கிராமப்புற மையப்பகுதிகளில் தேவையும் சரிந்து வருவதால் உற்பத்தியின் அளவை குறைப்பதாக பார்லே நிறுவனத்தின் நிர்வாகி தெரிவித்தார்.

ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான இந்திய பொருளாதாரம் கார் முதல் ஆடைகள் வரை விற்பனை சரிவை எதிர்கொண்டு வருகிறது. உற்பத்தியை குறைக்க நிறுவனங்கள் கட்டாயமாகிவருகிறது. வளர்ச்சியை புதுப்பிக்க அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.

பார்லே பிஸ்கட் விற்பனையின் வீழ்ச்சியினால் உற்பத்தியை குறைக்க வேண்டியிருக்கும். இதன் விளைவாக 8,000-10,000 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று மும்பையில் இருந்து பார்லேவின் பிரிவுத் தலைவர் மயங்க் ஷா கூறினார்.

“நிலைமை மிகவும் மோசமானது, அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால் வேலைவாய்ப்பு இழப்பு என்பது கட்டாயமாகிவிடும்” என்று அவர் கூறினார்.

1929ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பார்லே நிறுவனத்திற்கு சொந்தமாக 10 நிறுவனங்கள், 125 ஒப்பந்த உற்பத்தி ஆலைகள் நேரடி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் 1,00,000 பேரை பணியில் அமர்த்தியுள்ளது.

பார்லே நிறுவனத்தின் அதிகாரி ஷா, பார்லே பிஸ்கட் பிராண்டுகளுக்கான தேவை வேகமாக சரிந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியினால் ஒவ்வொரு பிஸ்கட்டிற்கு ரூ. 5 வரியாக கட்ட வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. 

அதிக வரி காரணமாக ஒவ்வொரு பேக்கிலும் குறைவான பிஸ்கட்களை வழங்கி வருகிறது பார்லே. இது கிராமப்புற இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட நுகர்வோரின் தேவையை குறைத்துள்ளது. இது பார்லேவின் வருவாயை பாதிக்கும் மேலாக குறைத்துள்ளது.

“இங்குள்ள நுகர்வோர்கள் விலையில் தான் மிகவும் கவனமாக உள்ளன. குறிப்பிட்ட விலைக்கு எத்தனை பிஸ்கட் பெறவேண்டும் என்பதில் கவனமாக உள்ளனர்” என்று ஷா தெரிவித்தார்.

1.4 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயைக் கொண்ட பார்லே, கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 

பார்லே குளுக்கோ என்று அழைக்கப்பட்ட மும்பையை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்தின் பெயர்தான் பார்லே-ஜி என்று மாற்றப்பட்டது. 1980-1990களில் அனைத்து வீடுகளிலும் உச்சரிக்கப்படும் பெயராகவும் இருந்தது. 2003 ஆம் ஆண்டில் பார்லே ஜி உலகின் மிகப்பெரிய பிஸ்கட் பிராண்டாக கருதப்பட்டது. 

இந்தியாவின் பொருளாதார மந்தநிலை ஏற்கனவே அதன் முக்கியமான வாகனத் தொழிலில் ஆயிரக்கணக்கான வேலை இழப்புகளுக்கு வழி வகுத்தது. தேவையில் வீழ்ச்சியை துரித்தப்படுத்தியது என்று திரு ஷா கூறினார்.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top