ஆதாருடன் - பான் கார்டு எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்!! செய்ய வேண்டியது என்ன?!

பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கடந்த செப்டம்பர் மாதத்தின்போது வருமான வரித்துறையினர் 3 மாதங்கள் கால நீட்டிப்பு செய்தனர்.

ஆதாருடன் - பான் கார்டு எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்!! செய்ய வேண்டியது என்ன?!

ஆன்லைனில் இணைப்பதற்கு e-filing portal -ல் லாக் இன் செய்ய வேண்டும்.

பான் கார்டு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ம்தேதியுடன் முடிகிறது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்தின்போது, வருமான வரித்துறையினர் இதற்காக காலக்கெடுவை 3 மாதங்கள் நீட்டிப்பு செய்திருந்தனர். 

மொத்தத்தில் 7 முறை கால நீட்டிப்பு இதற்காக செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் UIDAI நிறுவனத்தால் 12 இலக்க ஆதார் எண் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கில எழுத்து மற்றும் எண்ணுடன் கூடிய 10 இலக்க பான் எண்ணை வருமானத்துறையினர் வழங்குகின்றனர். 

ஆன்லைன் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாக பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க முடியும். 

ஆன்லைனில் இணைப்பதற்கு e-filing portal -ல் லாகின் செய்ய வேண்டும். இதன் பின்னர் பயனாளிகள் Profile settings -ல் உள்ள Link Aadhaar என்ற பகுதியை செலக்ட் செய்து இரு எண்களையும் இணைக்கலாம்.

எஸ்.எம்.எஸ். மூலம் இணைப்பதற்கு...

567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN <இந்த இடத்தில் உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை குறிக்க வேண்டும்> <இங்கு 10 இலக்க பான் எண்>

இந்த முறையில் எஸ்.எம்.எஸ். அமைத்து அதனை மேற்கண்ட 2 எண்களில் ஒன்றுக்கு அனுப்பலாம். இதன் மூலம் ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்படும். 

பான் கார்டு மற்றும் ஆதாரில் உள்ள பெயர்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே பயனாளிகள் ஆதார், பான் எண்கள் இணைக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 
 

Listen to the latest songs, only on JioSaavn.com