Profit

ஃப்ளிப்கார்ட்டின் பாரபட்சத்தை நிரூபிப்போம் -மேல்முறையீடு செய்யும் ஆன்லைன் விற்பனையாளர் அமைப்பு

இந்திய போட்டி ஆணையம், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் பிராண்டுகளை தேர்ந்தெடுப்பதில் எந்தவொரு விதிமீறல்களையும் செய்யவில்லை என்று கூறியது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஃப்ளிப்கார்ட்டின் பாரபட்சத்தை நிரூபிப்போம் -மேல்முறையீடு செய்யும் ஆன்லைன் விற்பனையாளர் அமைப்பு

அமேசான் நிறுவனம் க்ளௌட்டெய்ல் (Cloudtail) மற்றும் அப்பேரியோ (Appario) நிறுவனத்திற்கு மட்டுமே சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.


Mumbai: 

ஹைலைட்ஸ்

  1. அமேசான்,ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் விற்பனையாளர்களிடம் பாரபட்சம் காட்டுகிறது
  2. சாட்சியங்கள் இருந்தும் அதை ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை
  3. இதே குற்றச்சாட்டை அமேசான் மீதும் வைத்தது.

இந்திய போட்டி ஆணையத்திடம் (Competition Commission of India) இந்திய ஆன்லைன் விற்பனையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு (AIOVA), வால்மார்ட்டிற்கு சொந்தமான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக மேல்முறையீடு மனு ஒன்றை அளித்துள்ளதாக வழக்கறிஞர் குழுவின் ஒருவரான சாணக்யா பாஸா தெரிவித்துள்ளார். 

3500க்கும் மேற்பட்ட ஆன்லைன் விற்பனையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் அனைத்து இந்திய ஆன்லைன் விற்பனையாளர்கள் சங்கம், ஃப்ளிப்கார்ட் நிறுவனம் சில விற்பனையாளர்களுக்கு மட்டும் சாதகமாக செயல்படுகிறது என்று புகார் அளித்தது.  ஆனால் அதை ஃபேர் ட்ரேட் ரெகுலேட்டார் அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்திய போட்டி ஆணையம், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் பிராண்டுகளை தேர்ந்தெடுப்பதில் எந்தவொரு விதி மீறல்களையும் செய்யவில்லை என்று கூறியது. 

இந்திய போட்டி ஆணையம் கூறியதற்கு எதிராக இந்திய ஆன்லைன் விற்பனையாளர்கள் அமைப்பு, தேசிய நிறுவன சட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என வழக்கறிஞர் பாஸா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். அதில் போதுமான சாட்சியங்கள் அளித்தும் அதை ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை அதனால் இந்த மேல்முறையீட்டை தாக்கல் செய்வதாக தெரிவித்திருந்தார்.

இந்திய ஆன்லைன் விற்பனையாளர்கள் அமைப்பு, இதே குற்றச்சாட்டை அமேசான் மீதும் வைத்தது. அமேசான் நிறுவனம் க்ளௌட்டெய்ல் (Cloudtail) மற்றும் அப்பேரியோ (Appario) நிறுவனத்திற்கு மட்டுமே சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top