அடல் பென்ஷன் யோஜ்னா vs தேசிய ஓய்வூதிய திட்டம் : தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்த வருடத்திற்கான வரி முதலீடு செய்யாமல் காத்திருப்பவரா நீங்கள்? இரண்டு திட்டங்களை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

அடல் பென்ஷன் யோஜ்னா vs தேசிய ஓய்வூதிய திட்டம் : தெரிந்து கொள்ள வேண்டியவை

ஹைலைட்ஸ்

  • வரி முதலீடுகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்
  • அவற்றை சரியான முறையில் கையாள வேண்டும்
  • இது குறித்த திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்

இந்த வருடத்திற்கான வரி முதலீடு செய்யாமல் காத்திருப்பவரா நீங்கள்? இரண்டு திட்டங்களை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தின் மூலம், வருமான வரி சட்டம் செக்ஷன் 80Cயின் கீழ் 1,50,000 ரூபாய்க்கும் மேற்பட்ட சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. அடல் பென்சன் யோஜ்னா (APY) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) ஆகிய அரசு வழங்கும் ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன. இரண்டு வெவ்வேறு அம்சங்கள் கொண்டுள்ளன. அமைப்புச்சாரா மக்களுக்கு அடல் பென்சன் யோஜ்னா (AP திட்டமும், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) அனைவருக்கும் வழங்கப்படும். வயது, பங்களிப்பு, வரி ஏய்ப்பு ஆகிய அம்சங்கள் வித்தியாசமாக இருக்கும். இரண்டுக்குமான அடிப்படை வித்தியாசங்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.

அடல் பென்சன் யோஜ்னா (APY) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

வேறுபாடுகள்

வயது

அடல் பென்சன் யோஜ்னா (APY) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களிலும் பணம் பெற குறைந்தது 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். எனினும், அதிகபட்ச வயது கட்டுப்பாட்டில், அடல் பென்சன் யோஜ்னாவில் 40 வயது, தேசிய ஓய்வூதிய திட்டத்தில் 60 வயது.

முதலீடு அளவு

தேசிய ஓய்வூதிய திட்டத்தில், அதிகபட்ச முதலீட்டு அளவு இல்லை, மாத பங்களிப்பு குறைவாக இருந்தாலே, ஓய்வூதிய எல்லையை அடையளம். ஆனால், அடல் பென்சன் யோஜ்னா திட்டத்தில் முன்பே வரையறுக்கப்பட்ட அளவு பணத்தை செலுத்த வேண்டும்.

குறைந்த முதலீடு/ பங்களிப்பு

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தது 500 ரூபாய் பங்களிக்க வேண்டும், ஆண்டுக்கு குறைந்தது 6000 ரூபாய் பங்களிக்க வேண்டும். அடல் பென்சன் யோஜ்னா திட்டத்தில் மூன்று தவணைகளில் கட்ட வேண்டும். எனவே, ஆண்டுக்கு இரண்டு முறை கட்ட வேண்டும். மாதம் ஒருமுறை, காலாண்டு, அரையாண்டு என மூன்று தவணைகளிலும் கட்டலாம்.

வருமானம்

அடல் பென்சன் யோஜ் திட்டத்தில் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கக்கூடும். ஆனால், தேசிய ஓய்வூதிய திட்டத்தில், வருமானம் என்பது சந்தையின் முன்னேற்றம் பொருத்து அமையும்.

பதிவு செய்பவர்கள்

வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அடல் பென்சன் யோஜ்னா திட்டத்தில் பதிவு செய்யலாம். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்ய அனைத்து இந்திய குடிமக்களும், இந்திய குடியுரிமை இல்லாதவர்களும் பதிவு செய்யலாம். எனினும், வெளிநாட்டு குடிமக்கள் , இந்திய வம்சாவளியை சார்ந்தவர்கள், இந்துக் கூட்டுக்குடும்பம் ஆகியோர்கள் இந்த திட்டத்திற்கு பதிவு செய்ய இயலாது என NSDL இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வசதி

அடல் பென்சன் யோஜ்னா திட்டத்தில், கணக்கு வைத்துள்ளோரின் வயது சார்ந்து, நிலையான ஓய்வூதிய பணம் அளிக்கப்படும். ஆனால், தேசிய ஓய்வூதிய திட்டத்தில், கணக்கு வைத்திருப்போரின் வசதிக்கேற்ப, சேர்த்து வைத்த பணத்தை நிறுவன கடனாக, சமபங்காக, அரச பத்திரங்களாக மாற்றிக்கொள்ளலாம்.

கணக்கு வகை

அடல் பென்சன் யோஜ்னா திட்டத்தில் ஒரு வகையான கணக்கும், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இரண்டு வகையான கணக்குகளும் உள்ளன. டையர் I மற்றும் டையர் II வகை கணக்குகள் வைத்து கொள்ளலாம். 60 வயது அடையும் வரை டையர் I வகை கணக்குகளின் பணத்தை வெளியெடுக்க இயலாது. ஆனால், டையர் II வகை கணக்குகளில், விருப்பப்பட்டால் பணத்தை வெளியெடுக்கலாம். பணம் வெளியெடுப்பதற்கான எந்த விதிமுறைகளும் இல்லை. டையர் II என்பது கூடுதல் கணக்கு, அப்படியெனில், டையர் I கணக்கு வைத்திருப்பவர்களும், கூடுதலாக இன்னொரு, டையர் II கணக்கு வைத்துக்கொள்ளலாம்.

அகால வெளியேற்றம்

அடல் பென்சன் யோஜ்னா திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 60 வயதுக்கு முன்னரே, குறிப்பிட்ட காரணங்களுக்காக, தங்களது கணக்கில் இருந்து அகால வெளியேற்றம் பெறலாம். அதாவது இறப்பு அல்லது தீவிர நோய்களினால், இந்த முடிவு எடுக்கலாம்.

ஒற்றுமை

இரண்டு ஓய்வூதிய திட்டங்களுமே 60 வயது அடைந்த பின்னர் தொடங்குவது ஆகும்.

அடல் பென்சன் யோஜ்னா (APY) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) ஆகிய இரண்டும் ஒரே வகையான வருமான வரி சலுகைகள் உள்ளன. அடல் பென்சன் யோஜ்னா திட்டதிற்கு அளிக்கும் முதலீடுகள், 50000 ரூபாய் வரை வருமான வரி சட்டம் 80CCD (1B) சட்டத்தின்படி வரி ஏய்ப்பு செய்ய எடுத்து கொள்ளப்படும். 1.5 லட்சத்திற்கும் மேலாக, வரி ஏய்ப்பு செய்வதற்கு 80C சட்டப்படி செய்து கொள்ளலாம். கணக்கு வைத்துள்ளவர் இறந்துவிட்டால், ஓய்வூதிய பணம் அவர்களது கணவன்/ மனைவிக்கு கொடுக்கப்படும்.

More News