This Article is From Apr 01, 2020

LPG சிலிண்டர் விலை 65 ரூபாய் வரை குறைந்தது!!

LPG Rate: தற்போது, மத்திய அரசு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 12 எல்பிஜி சிலிண்டர்களை மானியத்துடன் வழங்குகிறது.

LPG சிலிண்டர் விலை 65 ரூபாய் வரை குறைந்தது!!

LPG Rate: அன்னியச் செலவாணி, சர்வதேச சந்தையில் எல்பிஜி-யின் விலை உள்ளிட்டவைகளைப் பொறுத்து மானியத்தில் மாற்றம் செய்யப்படும். 

LPG Rate: சமையல் செய்ய பயன்படும் மானியமில்லா எல்பிஜி (LPG) சிலிண்டர்கள் விலை 61.5 முதல் 65 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை 61.5 ரூபாயும், மும்பையில் 62 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த எல்பிஜி சிலிண்டரின் விலை 64.5 ரூபாய் குறைந்துள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று முதல் இந்த விலைக் குறைப்பு அமலுக்கு வருகிறது. 
 

மாற்றம் செய்யப்பட்டுள்ள எல்பிஜி விலை: 

CityNon-Subsidised LPG Price In Rupees Per 14.2 KG Cylinder
With Effect From April 1Existing
Delhi744.00805.5
Kolkata774.50839.5
Mumbai714.50776.5
Chennai761.50826
(Source: iocl.com)

தற்போது, மத்திய அரசு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 12 எல்பிஜி சிலிண்டர்களை மானியத்துடன் வழங்குகிறது. அதற்கு மேல் தேவைப்பட்டால், மானியமில்லா சிலிண்டரைத்தான் வாங்க வேண்டும். 12 சிலிண்டர்களுக்கு, எவ்வளவு மானியம் கொடுக்கப்படும் என்பது ஒவ்வோரு மாதத்திற்கும் வேறுபடும். அன்னியச் செலவாணி, சர்வதேச சந்தையில் எல்பிஜி-யின் விலை உள்ளிட்டவற்றைப்  பொறுத்து மானியத்தில் மாற்றம் செய்யப்படும்.