This Article is From May 29, 2020

மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற பொருளாதார மேம்பாட்டு ஆய்வுக் கூட்டம்!

FSDC ஏற்படுத்தப்பட்டு 22-வது முறையாக கூட்டம் கூடியுள்ளது. இதில் அமைச்சரும், அதிகாரிகளும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். கொரோனா வைரஸால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது. 

மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற பொருளாதார மேம்பாட்டு ஆய்வுக் கூட்டம்!

இம்மாத தொடக்கத்தில் ரூ. 21 லட்சம் கோடி அளவுக்கு கொரோனா நிவாரண சிறப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொருளாதார மேம்பாட்டு ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து முக்கியமாக ஆய்வு செய்யப்பட்டது. 

நாட்டில் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் நடைபெறும் முதல் பொருளாதார ஆய்வுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. FSDC என்ற இந்த அமைப்பில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் நிதித்துறையின் உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். 

FSDC ஏற்படுத்தப்பட்டு 22-வது முறையாக கூட்டம் கூடியுள்ளது. இதில் அமைச்சரும், அதிகாரிகளும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். கொரோனா வைரஸால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது. 

கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த FSDC அமைப்பின் கீழ் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையில் துணை கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கி கவர்னரை தவிர்த்து, செபியின் தலைவர் அஜய் தியாகி, IRDAI தலைவர் சுபாஷ் சந்திர குந்தியா, ஐ.பி.பி.ஐ. தலைவர் எம்.எஸ். சாஹூ, PFRDAI தலைவர் சுப்ரதிம் பந்ததோபாத்யாய் ஆயிகோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் தருண் பஜாஜ், வருவாய்த்துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே, நிதி சேவைகள் செயலர் தேபசிஷ் பாண்டா மற்றும் உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். 

பிரதமர் மோடி கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்தார். அதன்பின்னர் FSDC மூன்றாவதுமுறையாக கூட்டம் நடத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளது. 

கொரோனாவால் எதிர்பார்க்கப்பட்ட பாதிப்பை விட மிக அதிகமான பாதிப்பே தற்போது ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக இருக்கக்கூடும். 

இம்மாத தொடக்கத்தில் ரூ. 21 லட்சம் கோடி அளவுக்கு கொரோனா நிவாரண சிறப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது.

.