This Article is From Jul 05, 2019

பட்ஜெட் 2019 - ரயில்வே துறையில் பொது -தனியார் முதலீட்டு முறை

பட்ஜெட்டில் தனியார்மயமாக்கலுக்கான அரசாங்கத்தின் பெரிய முயற்சி ரயில்வேயில் தொடங்குகிறது என்று எதிர்கட்சி குற்றம் சாட்டியது.

பட்ஜெட் 2019 - ரயில்வே துறையில் பொது -தனியார் முதலீட்டு முறை

உலகின் மிகப்பெரிய இரயில்வே அமைப்பு இந்திய ரயில்வே (Representational)

New Delhi:

மத்திய நிரியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ரயில்வே துறையில் பொது -தனியார் கூட்டாண்மை முறையை முன்மொழிந்தார்.

உலகின் மிகப்பெரிய இரயில்வே அமைப்பு இந்திய ரயில்வே 1853 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்டதிலிருந்து அரசாங்கத்திற்கு சொந்தமாகவுள்ளது. கடந்த ஆண்டுகளின் இழப்பிலிருந்து மீள பல முயற்சிகளை தொடங்கியுள்ளது. 

கடந்த ஆண்டு ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் ரயில்வேயின் திறனை மேம்படுத்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது. ரயில்வேயின் சிக்னல் முறைகள் கூடுதலாக ரயில் வழித்தடங்களை உருவாக்குவது ஆகியவற்றை மேம்படுத்த வேண்டியிருந்தது. 

ரயில்வேயின் வருவாய் சரக்கு பிரிவில் இருந்து வருகிறது. ஆனால் அதில் பெரும்பகுதி பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தில் இழக்கப்படுகிறது.

 பட்ஜெட்டில் தனியார்மயமாக்கலுக்கான அரசாங்கத்தின் பெரிய முயற்சி ரயில்வேயில் தொடங்குகிறது என்று எதிர்கட்சி குற்றம் சாட்டியது. 

சிபிஎம் கட்சியின் இதழான மக்கள் ஜனநாயகத்தில் தலையங்கம் நிதி ஆயோக்கில் 46 பொதுத்துறை நிறுவனங்கள் 100 நாள்களில் மூடப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 100 நாட்களுக்குள் தனியாரின் பயணிகள் ரயில்கள் 100 நாட்களுக்குள் இயக்கப்படும் என்று தலையங்கம் தெரிவித்திருந்தது. 

.