பாரம்பரிய லெட்ஜர் முறையில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

Union Budget 2019: மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் செலவினங்களை அதிகரிப்பதற்கும் வரி விலக்கு வழங்குவதற்குமான நடவடிக்கைகளை அறிவிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

Union Budget 2019: முதல் பட்ஜெட்டை நிர்மலா தாக்கல் செய்து வருகிறார்.


நடுத்தர வர்க்கங்களுக்கான வரி விலக்கு, ஐந்தாண்டுகளாக பின்தங்கியுள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1970ல் கூடுதல் பொறுப்பாக நிதித்துறையை கவனித்துள்ளார். அப்போது அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் பட்ஜெட் உரை சூட்கேசில் இல்லாமல் நான்கு சிவப்பு துணிகளால் கட்டி எடுத்து வரப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இப்படி உரையை கொண்டு செல்வது நமது பாரம்பிரியம் என்றும் மேற்கத்திய சிந்தனையின் அடிமைத்தனத்திலிருந்து நாம் வெளியேறுவதை இது குறிக்கிறது என்றும் கூறினர். மேலும் பட்ஜெட் அல்ல லெட்ஜர் என்றும் தெரிவித்தனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த காலண்டில் 5.8%ஆக குறைந்திருந்தது. அதேபோல வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7%ஆக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது. எனவே இந்த நிலையை அடைய மத்திய பட்ஜெட்டில் கிராமபுற வளர்ச்சி மற்றும் சிறு, குறு தொழில்துறை நிறுவனங்களில் வளர்ச்சியை ஏற்படுத்த முற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்துவதன் மூலமும், விவசாயம், சுகாதாரம் மற்றும் சமூகத் துறைகளுக்கான செலவினங்களை அதிகரிப்பதன் மூலமும் நிதியமைச்சர் சாமானியர்களுக்கு நிவாரணம் அளிக்க வாய்ப்புள்ளது என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 3.4% சதவிகிதமாக இருந்தது. அத்துடன் கடந்த நிதியாண்டில் வருமானவரி வசூலிப்பதற்கு நிர்ணயித்த இலக்கை மத்திய அரசு தவறவிட்டது.

நிதி ஆதாரத்தை மத்திய அரசின் அமைப்புகள் தனியார் மையமாக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதன் மூலம் வருவாயை புதிய திட்டங்கள் மற்றும் பழைய திட்டங்களுக்கும் ஒதுக்கலாம் என்றும் தெரிகிறது

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சம் உள்ள நிலையில், பல ஆண்டுகளாக உச்சவரம்பு உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. எனினும், இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான உச்சவரம்புகள் உயர்த்தப்பட்டன. இதனால், நிச்சயம் இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top