ரூ.1.70 லட்சம் கோடிக்கு சலுகை தொகுப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைய உள்ளனர்.

ரூ.1.70 லட்சம் கோடிக்கு சலுகை தொகுப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஹைலைட்ஸ்

  • உடனடி உதவி தேவைப்படும் ஏழைகளுக்கு ஒரு தொகுப்பு தயாராக உள்ளது.
  • இந்த தொகுப்பு மதிப்பு ரூ .1.70 லட்சம் கோடியாகும்.
  • இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைய உள்ளனர்.

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட 36 மணி நேரத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். 

ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக பல்வேறு பொருளாதார திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு 5 கிலோ அரசி, 5 கிலோ கோதுமை இலவசமாக 3 மாத்துக்கு வழங்கப்படும். அதேபோல், அடுத்த மூன்று மாதத்திற்கு 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். 

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள கிட்டத்தட்ட 8.3 கோடி குடும்பங்களுக்கு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மேலும் 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1000 ரூபாய் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கப்படும் நிலையில் முதல் தவணை உடனடியாக வழங்கப்படுகிறது. சுமார் 8.7 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் முதற்கட்டமாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.

பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதமில்லாத கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் தலா 12 சதவீத பிஎஃப் தொகையை மத்திய அரசு அடுத்த 3 மாதங்களுக்குச் செலுத்தும்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ரூ.182ல் இருந்து ரூ.202 ஆக ஊதிய உயர்வு; இதன் மூலம் 5 கோடி மக்கள் பயனடைவார்கள், அவர்கள் வருமானம் ரூ.2,000 ஆக அதிகரிக்கும்

Listen to the latest songs, only on JioSaavn.com