ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த ரிசர்வ் வங்கி மூலம் ரூ.68,000 கோடி கடன் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தெரிகின்றன என்றார்.

வங்கியில் கடன் வாங்கி ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு காப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்படும் - நிர்மலா

நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை அதிகரிக்க, ஏற்றுமதியாளர்களுக்கு ஜிஎஸ்டி விதிகளை எளிதாக்குவது, வங்கியில் கடன் வாங்கி ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு காப்பீட்டுத் தொகை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

மேலும், நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த ரிசர்வ் வங்கி மூலம் ரூ.68,000 கோடி கடன் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு தழுவிய ஆலோசனைகளின் போது, நாங்கள் பெற்ற தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன, என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் வருடாந்த ஏற்றுமதியை மூன்று மடங்காக அதாவது, 1 டிரில்லியன் டாலராக உயர்த்த அரசாங்கம் விரும்பும் நேரத்தில் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள், ஏற்றுமதியாளர்களுக்கு கடன் வழங்கும் வங்கிகளுக்கு மேம்பட்ட காப்பீட்டுத் தொகை மற்றும் சில சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவை, ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். 

பட்ஜெட்டில் அறிவித்தபடி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீதான அதிக வரிகளை திரும்பப் பெறுதல், முதலீடுகள் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் வகையில் 10 அரசு வங்கிகளை இணைக்கும் மெகா இணைப்பு திட்டம் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 

சிறு, குறு நிறுவனங்களுக்கான (எம்.எஸ்.எம்.இ) பிரீமியம் மிகக் குறைவாக நிர்ணயிக்கப்படும். 

நாட்டின் ஏற்றுமதி வரியில் இதுவரை நடைமுறையில் உள்ள சுங்க வரி 2020 ஜனவரி 1 முதல் நீக்கப்படும்.

சுங்க வரி நீக்குவதால் ஜவுளி வியாபாரிகள் பெரியளவில் பயனடைவார்கள். 2020 ஜனவரி 1 முதல் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். புதிய திட்டத்தால் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.

வங்கியில் கடன் வாங்கி ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு காப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்படும்.

நாட்டின் ஏற்றுமதியை கண்காணிக்க குழு அமைக்கப்படும்.

ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை, நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன என்று கூறிய அவர் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தெரிகின்றன என்றார். 
 

More News