Profit

பண மோசடி வழக்கில் திருப்பம்… நிரவ் மோடியை நெருங்கும் இந்தியா!

பல்லாயிரம் கோடி ரூபாய் பண மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வர சிபிஐ பல மாதங்களாக முயன்று வருகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
பண மோசடி வழக்கில் திருப்பம்… நிரவ் மோடியை நெருங்கும் இந்தியா!

நிரவ் மோடி


ஹைலைட்ஸ்

  1. கடந்த பிப்ரவரியில் இந்தியாவிலிருந்து பறந்தார் நிரவ் மோடி
  2. தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் இல்லை
  3. சிபிஐ அவர் மீது பிணையில் வர முடியாத வழக்கு தொடர்ந்துள்ளது

பல்லாயிரம் கோடி ரூபாய் பண மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வர சிபிஐ பல மாதங்களாக முயன்று வருகிறது. இந்நிலையில், அவர் இங்கிலாந்தில் தலைமறைவாக இருப்பதாக தொடர்ந்து தகவல் வந்து கொண்டிருக்கிறது. இதனால், இங்கிலாந்து அரசிடம் இந்தியா, நிரவ் மோடியை தங்கள் நாட்டுக்கு அனுப்புமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. இது குறித்து பல நாட்களாக இரு நாட்டு உயர் அதிகாரிகளுக்கும் இடையில் உரையாடல் நடந்து வந்தது. இந்நிலையில், நிரவ் மோடியை இந்தியாவுக்கு கூட்டிச் செல்ல உள்ள சட்ட நடைமுறைகளை பின்பற்றலாம் என்று இங்கிலாந்து அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துவிட்டது. எனவே, சீக்கிரமே மோடியை சொந்த நாட்டுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என்று தெரிகிறது. இது ஒருபுறமிருக்க, நிரவ் மோடி எங்கு தலைமறைவாக இருக்கிறார் என்பது தெரியவில்லை.

அவர் கடைசியாக பிப்ரவரி மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு வந்தததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் இந்தியாவை விட்டு வெளியேறியதற்கான ஆவணங்கள் இல்லை. அதேபோல, கடந்த மார்ச் மாதம் அவர் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுவும் உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், நிரவ் மோடி பல பாஸ்போர்ட்களை வைத்து உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார் என்பது தான். 

போலியான ஆவணங்கள் சமர்பித்து கிட்டத்தட்ட 13,500 கோடி ரூபாய் கடன் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார் நிரவ் மோடி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் தான் இந்தக் கடனை அவர் வாங்கியுள்ளார். அந்த வங்கி, நிரவ் மோடியின் பித்தலாட்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே இந்தியாவிலிருந்து அவர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, சிபிஐ அவர் மீதும் அவர் குடும்பத்தில் இருக்கும் பலர் மீதும் வழக்கு தொடர்ந்து தேடி வருகிறது. ஆனால், குற்றத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே மோடி, குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார் நிரவ் மோடி. 

இந்த விவகாரத்திற்கு நடுவில், நிரவ் மோடி இங்கிலாந்து நாட்டு குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு குற்றத்தைத் தவிர்க்க இப்படி குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தால், அந்த குறிப்பிட்ட நபரை சொந்த நாட்டுக்கு இங்கிலாந்து அனுப்பிவிடும். அதுவே, அரசியல் காரணங்களுக்காக ஒருவர் மீது வழக்குகள் புனையப்பட்டால் அவருக்கு குடியுரிமையை இங்கிலாந்து கொடுத்துவிடும். இப்படி பலர் முன்னரே பலர் விண்ணப்பித்து குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)


Follow NDTV for latest election news and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top