Profit

ரூ.699 முதல் ரூ.8,499 வரை, அதிரடியான ஆறு JioFiber திட்டங்கள்!

JioFiber monthly plan price: 6 ஜியோபைபர் சேவைகள் 100Mbps முதல் 1Gbps வரையிலான இணைய வேகத்தை வழங்குகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ரூ.699 முதல் ரூ.8,499 வரை, அதிரடியான ஆறு JioFiber திட்டங்கள்!

JioFiber plans: 699 ரூபாய் முதல் 8,499 ரூபாய் வரை, ஆறு வகையான மாதத்திர சந்தாக்களுடன் அறிமுகமாகியுள்ளது.


JioFiber, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவை கடந்த வாரத்தில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜியோபைபர், 699 ரூபாய் முதல் 8,499 ரூபாய் வரை, ஆறு வகையான மாதத்திர சந்தாக்களுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த 6 ஜியோபைபர் சேவைகள் 100Mbps முதல் 1Gbps வரையிலான இணைய வேகத்தை வழங்குகிறது. முகேஷ் அம்பானியின் நிறுவ்னங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து இந்த சேவை செப்டம்பர் 5 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆறு JioFiber மாதந்திர சந்தா திட்டங்கள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

JioFiber மாதந்திர திட்டங்களின் விலை

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த ஜியோ பைபர் சேவையில்மொத்தம் ஆறு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை வெண்கலம் (Bronze) (மாதத்திற்கு ரூ. 699), வெள்ளி (Silver) (மாதத்திற்கு ரூ .849), தங்கம் (Gold) (மாதத்திற்கு ரூ. 1,299), டயமண்ட் (Diamond) (ரூ. மாதம் 2,499), பிளாட்டினம் (Platinum) (மாதத்திற்கு ரூ .3,999), மற்றும் டைட்டானியம் (Titanium) (மாதத்திற்கு ரூ .8,499). ஜியோ ஃபைபர் வெண்கலம் மற்றும் வெள்ளி திட்டங்கள் 100Mbps டேட்டா வேகத்தை வழங்கும், தங்கம் மற்றும் வைர திட்டங்கள் முறையே 250Mbps மற்றும் 500Mbps இணைய வேகத்துடன் அறிமுகமாகியுள்ளது. பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் திட்டங்கள் இரண்டும் 1Gbps  டெட்டா வேகத்தை வழங்கும். இந்த மாதாந்திர திட்டங்களுடன், ஜியோ பைபர் நீண்ட கால 3 மாத, 6 மாத மற்றும் 12 மாத திட்டங்களை கொண்டும் அறிமுகமாகியுள்ளது.

JioFibe rமாதந்திர திட்டங்களின் சலுகைகள்

இணைய இணைப்பிற்கு கூடுதலாக, ஒவ்வொரு ஜியோ பைபர் திட்டங்களும் நிறுவனத்தின் ஹோம் போன் லேண்ட்லைன் சேவை, டிவி வீடியோ அழைப்பு, கேமிங் மற்றும்  சாதனங்களுக்கு நார்டன் வைரஸ் தடுப்பு ஆகியவற்றையும் வழங்குகிறது. குறிப்பாக, ஜியோ பைபர் பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் திட்ட பயனர்கள் ஜியோ விஆர் இயங்குதளம், ஜியோ முதல் நாள் முதல்-காட்சி திரைப்பட சேவை மற்றும் சிறப்பு விளையாட்டு உள்ளடக்கம் ஆகியவற்றிற்கான அனுமதிகளை பெறுவார்கள்.

ஜியோ ஆண்டு திட்டங்களை பெறும் புதிய ஜியோ பைபர் வாடிக்கையாளர்களுக்கான வரவேற்பு சலுகையையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இந்த சலுகையானது இலவச ஜியோ ஹோம் கேட்வே சாதனம் (ரூ .5,000 மதிப்புடையது), ஜியோ 4K செட் டாப் பாக்ஸ் (ரூ .6,400 மதிப்புடையது), இரண்டு மாத கூடுதல் சேவை மற்றும் இரட்டை தரவு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கூடுதலாக, சலுகை வெண்கல சந்தாதாரர்களுக்கான ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோசாவ்ன் (JioSaavn) பயன்பாடுகளுக்கு மூன்று மாத இலவச அனுமதிகளை உள்ளடக்கியது. வெள்ளி திட்ட சந்தாதாரர்கள் OTT பயன்பாடுகளுக்கான மூன்று மாத சந்தாவைப் பெறுவார்கள், தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் திட்ட சந்தாதாரர்கள் OTT பயன்பாடுகளுக்கான இலவச வருடாந்திர சந்தாவைப் பெறுவார்கள். எந்த OTT பயன்பாடுகள் சந்தாவில் சேர்க்கப்படும் என்பது தெளிவாக இல்லை.

மேலும், ஜியோ ஃபோர்வர் கோல்ட் ஆண்டு திட்டத்திற்கான ஜியோ ஃபைபர் சந்தாதாரர்களுக்கு இலவச மியூஸ் 2 புளூடூத் ஸ்பீக்கர் கிடைக்கும். இதேபோல், வெள்ளி ஆண்டு திட்ட சந்தாதாரர்களுக்கு தம்ப் 2 புளூடூத் ஸ்பீக்கர்கள் கிடைக்கும். டயமண்ட், பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் ஆண்டு திட்ட சந்தாதாரர்களுக்கு இலவச எச்டி டிவி கிடைக்கும் (ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறு திரை அளவு). தங்கத் திட்ட சந்தாதாரர்களுக்கு இலவசமாக 24 அங்குல எச்டி டிவியும் கிடைக்கும், ஆனால் அவர்கள் இரண்டு ஆண்டு திட்டத்தை தேர்வு செய்தால் மட்டுமே.

ஆறு மாத திட்டங்கள் ஒரு மாத கூடுதல் சேவை மற்றும் 50 சதவீதம் கூடுதல் டேட்டா, 3 மாத திட்டம் 25 சதவீத கூடுதல் டேட்டா என சலுகைகளை அடுக்கியுள்ளது.

JioFiber இணைய வேகம்

JioFiber மாதாந்திர திட்டம்மொத்த அதிவேக டேட்டாஇணைய வேகம்
வெண்கலம் (Bronze)150 GB100 Mbps
வெள்ளி (Silver)400 GB100 Mbps
தங்கம் (Gold)750 GB250 Mbps
டயமண்ட் (Diamond)1500 GB500 Mbps
பிளாட்டினம் (Platinum)2500 GB1 Gbps
டைட்டானியம் (Titanium)5000 GB1 Gbps
(தகவல்: Reliance Jio)

ஜியோ பைபர் திட்டங்கள் ஒவ்வொன்றும் வரம்பற்ற தரவு பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றத்துடன் வரும் என்று நிறுவனம் கூறுகிறது, இருப்பினும் ஒரு FUP இருக்கும், இந்த வரம்பு 100GB அடிப்படை வெண்கலத் திட்டத்திலிருந்து தொடங்கி, 5000GB வரை டாப்-எண்ட் டைட்டானியம் திட்டத்திற்கு இருக்கும். ஆரம்பத்தில், திட்டத்தைப் பொறுத்து 250 ஜிபி வரை இலவச கூடுதல் அதிவேக தரவையும் ஜியோ வழங்கவுள்ளது. இந்த கூடுதல் தரவு ஒவ்வொரு திட்டத்தின் FUP வரம்பிலிருந்து தனித்தனியாக இருக்கும். 1Gbps திட்டங்களுக்கு கூடுதல் இலவச தரவு கிடைக்காது.



Follow NDTV for latest election news and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top