தபால் துறையின் தேசிய சேமிப்பு சான்றிதழில் முதலீடு செய்ய தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்…!

National Savings Certificates (NSC): தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒன்பது சிறிய சேமிப்பு திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

தபால் துறையின் தேசிய சேமிப்பு சான்றிதழில் முதலீடு செய்ய தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்…!

சேமிப்பு சான்றிதழ்களில் முதலீடு 7.9 சதவீத விகிதத்தில் வட்டியை பெறுகிறது

இந்திய தபால் துறை தனது கிளைகளின் மூலம் தேசிய சேமிப்பு சான்றிதழ்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. இதற்கு 7.9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 

தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (என்.எஸ்.சி) போன்ற சிறிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதங்கள் நிதி அமைச்சகத்தினால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் வட்டி விகிதமாக இதை வைத்துள்ளது. தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒன்பது சிறிய சேமிப்பு திட்டங்களின் ஒரு பகுதியாகும். 

தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்:

வருவாய் விகிதம்:

நடப்பு நிதியாண்டின்  மூன்றாம் காலாண்டில், தேசிய சேமிப்பு சான்றிதழ்களில் முதலீடு 7.9 சதவீத விகிதத்தில் வட்டியை பெறுகிறது. வட்டி ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், வட்டி முதிர்ச்சி அடையும் காலத்தில் தான் செலுத்தப்படுகிறது.  உதாரணமாக ரூ. 100 தொகை ஐந்து ஆண்டுகளில் ரூ. 146.25 ஆக வளர்கிறது. 

கணக்கைத் தொடங்க குறைந்தபட்ச முதலீடு: 

தேசிய சேமிப்பு சான்றிதழ்களில் முதலீடு செய்ய ஒருவர் குறைந்த பட்சம் ரூ. 1,000 முதலீடு செய்ய வேண்டும் என்று இந்திய போஸ்ட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவிக்கிறது. 

முதலீட்டு வரம்பு

ரூ. 1000க்கு மேல் எவ்வளவு வேண்டுமென்றாலும் தேசிய சேமிப்பு சான்றிதழ்களில் முதலீடு செய்யலாம். அதிக பட்ச வரம்பு ஏதும் இல்லை.

மாற்றம்

சில நிபந்தனைகளின் கீழ் என்.எஸ்.சியில் முதலீடு மாற்றத்தக்கது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றப்பட்டால், பழைய சான்றிதழ்கள் மாற்றப்படாது ஆனால் புதியதாக மாற்றப்பட்டவரின் பெயர் வட்டமிட்டு குறிப்பிடப்படும்

வருமான வரி விலக்கு 

தேசிய சேமிப்பு சான்றிதழ்களில் வைப்புகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி யின் கீழ் வரிவிலக்கினை கோர முடியும்.

More News