கொரோனா: முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 மாதங்களில் 28 சதவீதம் குறைவு!

இதனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் 19,000 கோடி டாலர் குறைந்துள்ளது.

கொரோனா: முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 மாதங்களில் 28 சதவீதம் குறைவு!

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 மாதங்களில் 28 சதவீதம் குறைவு!

ஹைலைட்ஸ்

  • முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 மாதங்களில் 28 சதவீதம் குறைவு!
  • கடந்த 2 மாதங்களில் 19,000 கோடி டாலர் குறைந்துள்ளது
  • மற்ற தொழிலதிபர்களின் சொத்து மதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது.
Mumbai:

இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பங்குசந்தைகள் வீழ்ச்சி காரணமாக கடந்த 2 மாதங்களில் 28 சதவீதம் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் 19,000 கோடி டாலர் குறைந்துள்ளது. இதனால், உலகளாவிய கோடீஸ்வரர்களின் தரவரிசையில் எட்டு இடங்கள் குறைத்து 17வது இடத்திற்கு கொண்டு சென்றதாக ஹுருன் குளோபல் பட்டியல் தெரிவித்துள்ளது.

இதைபோல், மற்ற தொழிலதிபர்களின் சொத்து மதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 37 சதவீதம் அல்லது 600 கோடி டாலர்கள் குறைந்துள்ளது. ஹெச்சிஎல் தொழில்நுட்ப நிறுவனத்தி்ன் தலைவர் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 26 சதவீதம் அல்லது 500 கோடி டாலர்கள் குறைந்தது. உதய் கோட்டக்கின் சொத்து மதிப்பு 28 சதவீதம் அல்லது 400 கோடி டாலர்கள் சரிந்துள்ளது.

சொத்து மதிப்புக் குறைவால் இந்த 3 கோடீஸ்வரர்களும் உலகின் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர். முகேஷ் அம்பானி மட்டும் முதல் 100 இடங்களில் நீடிக்கும் ஒரே இந்திய கோடீஸ்வரர் ஆவார்.

அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிஜோஸ். அமெரிக்கத் தொழிலதிபர் வாரன் பப்பட்டின் சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் 1,900 கோடி டாலர் குறைந்து 8,300 கோடி டாலாரகச் சரிந்துள்ளது.

இதுதவிர கார்லோஸ் ஸ்லிம் பேமலி, பில் கேட்ஸ், மார்க் ஜூகர்பெர்க், லாரி பேஜ், செர்ஜி ப்ரின், மிகேல் ப்ளூம்பெர்க் ஆகிய தொழிலதிபர்களின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com