அமேசான், ஃபிளிப்கார்ட்டுக்கு போட்டியாக இ-காமர்ஸில் களம் இறங்குகிறது ரிலையன்ஸ்

ஆக்மென்டெட் ரியாலிட்டி, ஹோலோகிராப், விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பங்களோடு ஷாப்பிங் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதாக இருக்கும்

அமேசான், ஃபிளிப்கார்ட்டுக்கு போட்டியாக இ-காமர்ஸில் களம் இறங்குகிறது ரிலையன்ஸ்

அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக களம் இறங்கப் போவதாக, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் வழக்கமாக இந்தியாவில் இருக்கும் விற்பனை முறைகளில் சில்லரை விற்பனையை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை, நேற்று அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் சந்திப்பில் அறிவித்தார் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் ரீடெயில் லிமிட்டெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனங்கள் இணைந்து இந்த இ-காமர்ஸ் திட்டத்தை செயல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய இ-காமர்ஸ் சந்தையை பிடிக்க, அமேசான், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றன. தற்போது 32.7 பில்லியன் டாலராக இருக்கும் இந்திய இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு, 2022-ம் ஆண்டில் 72 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொலை தொடர்பு மற்றும் பிராட்பேண்ட் உள்கட்டமைப்புகளில், இதுவரை 2.5 லட்சம் கோடிகளை முதலீடு செய்துள்ள அந்நிறுவனம், இப்போது ஆன்லைன் சில்லரை விற்பனையில் வளர்ச்சிய பெற திட்டங்களை வகுத்து வருகிறது.

இந்த இ-காமர்ஸ் நிறுவனம், வெறும் ஆன்லைன் விற்பனை நிறுவனமாக இல்லாமல், ஆக்மென்டெட் ரியாலிட்டி, ஹோலோகிராப், விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பங்களோடு ஷாப்பிங் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதாக இருக்கும் என்று முகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், சிறு வியாபாரிகளும், பெரும் வணிகம் செய்யும் அளவுக்கு தங்கள் ஆன்லைன் விற்பனைத் தளம் உதவும் என்றும் தெரிவித்தார். ரிலையன்ஸின் இந்த இ- காமர்ஸ் நிறுவனம் எப்போது தொடங்கப்படும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு போன்ற தகவல்களை அவர் அறிவிக்கவில்லை.(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Newsbeep