நிலுவைத் தொகையை எப்படி செலுத்தனும்…? Airtel, Vodafone -க்கு அறிவுரை கொடுத்த Jio நிறுவனம்

நீதிமன்றம் கடந்த கால நிலுவைத் தொகையான 7 பில்லியன் டாலர் அதாவது ரூ. 40,000 கோடியினை செலுத்த வேண்டும் தெரிவித்தது. நீதிமன்ற ஆணையின்படி அனைத்து ஆபரேட்டர்களும் 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலுவைத் தொகையை எப்படி செலுத்தனும்…? Airtel, Vodafone -க்கு அறிவுரை கொடுத்த Jio நிறுவனம்

ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனத்தினால் இந்த நிலுவைத் தொகையினை எளிதாக செலுத்த முடியும் -ஜியோ நிறுவனம்

ஹைலைட்ஸ்

  • நிதி ஆதாரங்கள் நிறுவனத்திற்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்.
  • ஏர்டெல் நிறுவனம் இந்தியா முழுவதும் 1,63,000 டவர்களை கொண்டுள்ளன
  • ஏர்டெல் மற்றும் வோடாபோன் நஷ்டத்தில் உள்ளது

தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு சலுகைகள் வழங்கக்கூடாது என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தொலை தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடாபோன் தங்கள் நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான தலைவர்,  ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனத்தினால் இந்த நிலுவைத் தொகையினை எளிதாக செலுத்த முடியும் என்றும் அதற்கான நிதி ஆதாரங்கள் நிறுவனத்திற்கு உண்டு என்று தெரிவித்துள்ளார். 

ஏர்டெல் நிறுவனம் தனது சொத்துக்களின் சிறிய பகுதியினை விற்றோ அல்லது 15-20 சதவீத புதிய பங்குகளை வெளியிட்டால் இண்டஸ் டவர் மூலம் எளிதாக திரட்ட முடியும். வோடாபோன் நிறுவனம் இண்டஸ் டவர் பிஸ்னஸில் உள்ள பங்கினை விற்று தங்கள் நிலுவைத் தொகையை செலுத்த முடியும். அந்த நிறுவனங்களுக்கு போதுமான ஆதாரஙகள் உண்டு என்று தெரிவித்துள்ளார். மேலும் ஏர்டெல் நிறுவனம் இந்தியா முழுவதும் 1,63,000 டவர்களை கொண்டுள்ளன. அதன் மூலம் வணிகம் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார். 