''18 மாதங்களில் கடனே இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் மாறும்'' : முகேஷ் அம்பானி

கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 1,54,478 கோடியாக உயர்ந்திருக்கும் நிலையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதன் தலைவர் முகேஷ் அம்பானி.

''18 மாதங்களில் கடனே இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் மாறும்'' : முகேஷ் அம்பானி

ரிலையன்ஸின் 42-வது பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

18 மாதங்களில் கடனே இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் மாறும் என்று அதன் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 1,54,478 கோடியாக உயர்ந்திருக்கும் நிலையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதன் தலைவர் முகேஷ் அம்பானி. 

ரிலையன்ஸ் குழுமத்தின் 42-வது பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது- 

குழுமத்திற்கு வரும் வருமானத்தில் 50 சதவீதம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் சில்லரை வர்த்தகத்தில் விரைவில் நமக்கு கிடைக்கும். 

Newsbeep

கடந்த பொதுக்குழு கூட்டம் 2018-ல் நடைபெற்றது. இதன்பின்னர் ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் 20 சதவீதம் வரைக்கும் உயர்ந்துள்ளது. இருப்பினும் தேசிய பங்குச் சந்தையில் சிறிது பின்னடைவை சந்தித்திருக்கிறோம். 

சர்வதேச அளவில் பல நிறுவனங்களுடைய நம்பிக்கையை ரிலையன்ஸ் குழுமம் பெற்றுள்ளது. புகழ்பெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் நம்மிடம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதுதொடர்பாக பண பரிவர்த்தனைகள் இந்த நிதியாண்டு இறுதிக்குள் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்