This Article is From Jul 25, 2020

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 5 ஆம் இடத்துக்கு முன்னேறிய முகேஷ் அம்பானி!

உலகப்பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் சிஇஓ மார்க் ஜூக்கர் பெர்க்கிற்கு அடுத்தப்படியாக, முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 5 ஆம் இடத்துக்கு முன்னேறிய முகேஷ் அம்பானி!

முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலர்

ஹைலைட்ஸ்

  • முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலர்
  • முதல் இடத்தில் அமேசான் நிறுவனர் பெசோ
  • நான்காம் இடத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க்

ஃபோர்ப்ஸ் என்ற பத்திரகை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள டாப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2020 ஆம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அதிபர் 75 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், உலக பணக்காரர்களின் பட்டியலில் 5 ஆம் இடத்துக்கு முன்னெறியுள்ளார். இவருக்கு முன் 4 ஆம் இடத்தில் மார்க் ஜூக்கர் பெர்க்கும், முதல் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார். இதுபற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம். 

  1. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் புதனன்று 2,010 ரூபாயைத் தொட்டது. இது புதிய உச்சமாகும். 
  2. இதுவே முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் முன்னினி நிறுவனமாக தக்க வைக்க உதவுகிறது.
  3. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, அம்பானியின் சொத்து மதிப்பு புதனன்று 4.49 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது,  3.2 பில்லியன் டாலர் அளவுக்கு அவருடைய சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. 
  4. ஃபோர்ப்ஸ் பத்தரிகை வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அமேசான் நிறுவனரும் தலைமை செயலாளருமான ஜெஃப் பெசோஸ் 185.8 பில்லியன் டாலருடன் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
  5. பெசோஸைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில்கேட்ஸ் 113.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
  6. மூன்றாம் இடத்தில் LVMH மொயட் ஹென்னெஸி லூயிஸ் உய்ட்டனின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர், அவர்களது சொத்து மதிப்பு 112 பில்லியன் டாலர் ஆகும். 
  7. நான்காம் இடத்தில் ஃபேஸ்புக் நிறுவனரும், தலைமை செயலாளருமான மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.
  8. கடந்தாண்டு பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  அம்பானி, இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு பொன்னான காலம் என்றார். அவர் சொன்னது போலவே, தற்போது உலகப் பணக்காரர் பட்டியலில் முன்னேறி விட்டார்.
  9. ரிலையன்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 33 சதவீத பங்குகளை டிஜிட்டல் தளங்களான ஜியோ, ஃபேஸ்புக், கூகுள் ஆகியவற்றில் முதலீடு செய்தது. அதில் அடித்தது தான் இந்த அதிர்ஷ்டம்.
  10. ஜியோவில் பங்குகளை விற்பனை செய்ததுடன், உலகளாவிய எண்ணெய் நிறுவனமான BP உடனான கூட்டாண்மை வைத்தது. மேலும், ரூ .53,000 கோடி மதிப்புள்ள சொத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை நிகர கடன் இல்லாததாக மாற்ற உதவியது.
.