
ஒப்பந்த அடிப்படையில், சுசுகி மோட்டார் குஜராத் பிரைவேட் லிமிடெட், மாருதி சுசுகிக்கு கார்களை உற்பத்தி செய்து அளிக்கிறது.
குஜராத்தில் 2 மாத கால முடக்கத்திற்கு பின்னர் மாருதி சுசுகி நிறுவனம் தனது உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது. நாடு 4-வது கட்ட பொது முடக்கத்தில் இருக்கும் சூழலில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் மாருதி சுசுகி செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாருதி சுசுகி தனது பணியை மீண்டும் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
25-05-2020 திங்கள் முதல், குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சுசுகி மோட்டார் குஜராத் நிறுவனம் தனது உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது. பணிகளின்போது அரசு குறிப்பிட்டுள்ள அனைத்து பாதுகாப்பு முறைகளும் கடைபிடிக்கப்படுகின்றன. பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு சுசுகி நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில், சுசுகி மோட்டார் குஜராத் பிரைவேட் லிமிடெட், மாருதி சுசுகிக்கு கார்களை உற்பத்தி செய்து அளிக்கிறது.
கொரோனாவால் 2 மாதத்திற்கும் மேலாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும் சூழலில், பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்காக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதன் அடிப்படையில் விதிகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
முன்னதாக மனேசரில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 12-ம்தேதியும், குர்கான் தொழிற்சாலையில் கடந்த 18-ம் தேதியும் மாருதி சுசுகி தனது உற்பத்தியை மீண்டும் தொடக்கியது.