கொரோனாவால் மாருதி சுசுகி நிறுவனத்துக்கு கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெரும் நஷ்டம்!

கொரோனா வைரஸால் மாருதி சுசுகி நிறுவனம் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளது

கொரோனாவால் மாருதி சுசுகி நிறுவனத்துக்கு கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெரும் நஷ்டம்!

ஹைலைட்ஸ்

  • சுமார் 249.4 கோடி ரூபாய் நஷ்டம்
  • நாடு முழுவதும் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
  • கடந்த 17 ஆண்டுகள் இல்லாத வகையில் இழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு ஆட்டோ மொபைல் துறையையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் டிவிஎஸ், மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் பொருளாதார பின்னடவுச் சந்தித்துள்ளன. குறிப்பாக மாருதி சுசுகி நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

இதுதொடர்பாக முதல்காலாண்டின் நிதிநிலையை அறிக்கையை மாருதி சுசிகி நிறுவனம் வெளியிட்டது. அதன்படி,  

  1. மாருதி சுசிகி நிறுவனம் கடந்த ஏப்ரல் - ஜூன் வரையில் சுமார் 3,677.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
  2. முதல் காலாண்டில் 76,599 வாகனங்களை விற்றுள்ளது. இவற்றில் 67,027 வாகனங்கள் உள்நாட்டில் விற்கப்பட்டது. 9,572 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. 
  3. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டைக் காட்டிலும், இந்த முதல் காலாண்டு 73.61 சதவீதம் இழப்பைச் சந்தித்துள்ளது. 
  4. ஒட்டுமொத்தமாக 249 கோடி ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
  5. இதுகுறித்து மாருதி சுசுகி கூறுகையில், நஷ்டம் என்பது கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நிதியாண்டையும், கடந்த நிதியாண்டையும் ஒப்பிட முடியாது
  6. மேலும், மாருதி சுசகி நிறுவனத்தின் வரலாற்றிலேயே இந்த ஏப்ரல்-ஜூன் மாதங்கள் தான் மிகமோசமானதாக அமைந்துள்ளது. 
  7. கொரோனாவால் பூஜ்ஜிய உற்பத்தி மற்றும் பூஜ்ஜிய விற்பனையாகவே இருந்தது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு அறிவுறுத்தலின்படி, உற்பத்தி தொழிற்சாலைகளும் இந்த மாதங்களில் மூடப்பட்டன.
  8. மே மாதத்தில் வாகன உற்பத்தியும், வாகன விற்பனையும் சிறிதளவு நடைபெற்றது.