மே மாதம் 13,865 கார்களை விற்ற மாருதி சுசுகி!

மே மாதம் 13,865 எண்ணிக்கையில் தனது கார்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. முன்னதாக கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் எவ்வித கட்டுப்பாடுகள் இன்றியும் முழு முடக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டதன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை என அறிவித்திருந்தது.

மே மாதம் 13,865 கார்களை விற்ற மாருதி சுசுகி!

மாருதி சுசுகி பங்குகள் 4% க்கும் மேலாக உயர்ந்து 5,862.25 ரூபாயை எட்டியுள்ளன

நாட்டின் மிகப் பெரும் கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனம் மே மாதம் 13,865 எண்ணிக்கையில் தனது கார்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. முன்னதாக கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் எவ்வித கட்டுப்பாடுகள் இன்றியும் முழு முடக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டதன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை என அறிவித்திருந்தது. இக்காலக்கட்டங்களில் அதற்கான உற்பத்தியும் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக இந்நிறுவனம் பூஜ்ய விற்பனையிலிருந்து தன்னை மீட்டெடுத்துக்கொண்டது. உள்நாடு மற்றும் வெளி நாடு என மொத்தம் 18,539 கார்களை விற்பனை செய்துள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.

அரசு அறிவித்திருந்த வழிகாட்டுதலின்படி இந்நிறுவனம் மே 12 மற்றும் மே 18 முதல் மானேசர் மற்றும் குருகிராம் பகுதிகளில் உள்ள தனது தொழிற்சாலைகளில் உற்பத்தியை தொடங்கியது.

மாருதி சுசுகிக்கான ஒப்பந்த அடிப்படையில் கார்களை தயாரிக்கும் சுசுகி மோட்டார் குஜராத் பிரைவேட் லிமிடெட் (SMG)ல் உற்பத்தி மே 25 முதல் மீண்டும் தொடங்கியது. குஜராத்தின் முந்த்ரா மற்றும் மும்பையில் துறைமுக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து 4,651 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போல முதல் கட்டமாக மிக முக்கிய நகரங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி ஷோரூம்கள் திறக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இதர ஷோரூம்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இல்லாத பட்சத்தில் உரிய நேரத்தில் திறக்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது. பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 4.46 சதவீதம் உயர்ந்து பி.எஸ்.இ.யின் ரூ .5,862.25 என்கிற  அளவினை எட்டியுள்ளது. இது முன்னதாக ரூ 5,612.00 என்கிற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.