Profit

கார்ப்ரேட் வரி குறைப்பின் எதிரொலி - சென்செக்ஸ் 900 புள்ளிகள் அதிகரிப்பு

உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் புதிய உற்பத்தி நிறுவனங்கள் மீதான கார்ப்ரேட் வரியினை அரசு குறைக்க முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கார்ப்ரேட் வரி குறைப்பின் எதிரொலி - சென்செக்ஸ் 900 புள்ளிகள் அதிகரிப்பு

உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்ரேட் வரியினை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததையடுத்து வெள்ளிக்கிழமை இன்று லாபத்துடன் சந்தைகள் தொடங்கின. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 949.12 புள்ளிகள் அதிகரித்து 37,042.59 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 227.7 புள்ளிகள் அதிகரித்து 10,932.50 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.  

உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் புதிய உற்பத்தி நிறுவனங்கள் மீதான கார்ப்ரேட் வரியினை அரசு குறைக்க முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த மாற்றத்தின் மூலம் நிறுவனங்களுக்கான வரி விகிதம் கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் உட்பட 17.01 சதவீதமாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

400 மாவட்டங்களில் கடன் வழங்குவதை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 400 மாவட்டங்களில் கடன்களை ஊக்குவிக்க கண்காட்சிகளை நடத்துமாறு பொதுத்துறை வங்கிகளைஅரசாங்கம் கேட்டுக் கொண்டது. பொதுத் துறை வங்கிகள் அக்டோபர் 3 முதல் ‘லோன் மேளா' நடத்தி கடன் கொடுக்கத் தொடங்கும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top