Profit

பொருளாதார மந்த நிலை எதிரொலி : பங்குச்சந்தை வர்த்தகம் சரிந்தது!! 10 முக்கிய தகவல்கள்!

எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டாத நிலையில், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி குறைந்திருப்பதை காட்டுகின்றன. இது பங்குச்சந்தை வர்த்தகத்தையும் பாதித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பொருளாதார மந்த நிலை எதிரொலி : பங்குச்சந்தை வர்த்தகம் சரிந்தது!! 10 முக்கிய தகவல்கள்!

பஞ்சாப் தேசிய வங்கியின் பங்குகள் 8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன.


நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலை காரணமாக பங்குச் சந்தை வர்த்தகம் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. நாட்டின் வளர்ச்சி தொடர்பான புள்ளி விவரங்கள் கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்டன. இந்த நிலையில் நாட்டின் வளர்ச்சி விகிதம் பங்கு வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம். 

1. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 800 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50 புள்ளிகளும் சரிந்திருக்கின்றன. 

2. வெள்ளியன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் ஜூன் 30-ம்தேதியுடன் முடிந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக மட்டுமே உள்ளது. 

3. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி என்பது எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக உள்ளது. பல்வேறு சர்வதேச காரணங்கள் இதன் பின்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

4. சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர், காலனிகள், ஸ்மார்ட் வாட்ச், டிவி போன்ற சீன பொருட்களுக்கு 15 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது, அமெரிக்க கச்சா எண்ணெய்க்கு சீனா வரியை விதித்தது போன்றவை சர்வதேச பொருளாதாரத்தை பாதித்துள்ளன. 

5. அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக யுத்தம் சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

6. பொருளாதார மந்த நிலையை சரி செய்யும் விதமாக நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டத்தை கடந்த வெள்ளியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

7. வங்கிகள் இணைப்பு அறிவிப்பால் பங்குச் சந்தையில் அவற்றின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 3.5 சதவீதம் குறைந்துள்ளது. 

8. பஞ்சாப் தேசிய வங்கி, ஓரியன்டல் வங்கி, யுனைட்டட் வங்கி ஆகியவை இணைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இங்கு மட்டும் ரூ. 17.95 லட்சம் கோடிக்கு பணப்புழக்கம் நடைபெறுகிறது. 

9. கனரா வங்கி சிண்டிகேட் வங்கியுடனும், யூனியன் பேங்க், ஆந்திரா பேங்க் மற்றும் கார்ப்பரேஷன் பேங்க் ஆகியவையும், அலகாபாத் வங்கியுடன் இந்தியன் வங்கியும் இணைக்கப்பட உள்ளது. 

10. பங்குச்சந்தையில் அல்ட்ரா டெக் சிமென்ட்டின் பங்குகள் அதிக சரிவை சந்தித்துள்ளன. 3.7 சதவீத அளவுக்கு பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இதேபோன்று இந்தியன் ஆயில், டாடா மோட்டார்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், எச்.டி.எப்.சி., டாடா ஸ்டீல் உள்ளிட்டவற்றின் பங்குகளும் சரிந்துள்ளன. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top