பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைவு!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்துள்ளது

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைவு!

16 நாட்கள் எரிபொருள் விலை ஏற்றத்தில் இருந்த நிலையில், தற்போது சிறிய அளவு குறைந்துள்ளது

ஹைலைட்ஸ்

  • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து மாற்றம் கண்டு வருகிறது
  • சில பைசா மட்டுமே பெட்ரோல், டீசல் விலையில் குறைக்கப்பட்டுள்ளது
  • டாலருக்கு எதிரான ருபாய் மதிப்பும் மாறி வருகிறது
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் எரிபொருளின் விலை, சில பைசாக்கள் மட்டுமே குறைக்கப்பட்டு உள்ளதால், சந்தை விலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. 

இன்று காலைய நிலவரப்படி, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 78.29 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 80.92 ரூபாய்க்கும், மும்பையில் 86.1 ரூபாய்க்கும், சென்னையில் 81.28 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல டீசல் எரிபொருளின் விலை, மேற்குறிப்பிட்ட நகரங்களில் முறையே, ரூ.69.2, ரூ.71,75, ரூ.73.67 மற்றும் 73.06 ரூபாய்க்கும் கிடைக்கிறது. கடந்த மூன்று நாட்களில் வெறும் 11 முதல் 15 பைசா வரையே விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறுதல் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை:

தொடர்ந்து 16 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக எரிபொருறள் விலை குறைந்து வருகிறது. 

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில், பீப்பாய ஒன்று 74.49 டாலரிலிருந்து 78.75 டாலர் வரை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதனாலும், இந்தியாவில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் மாறி வருவது, எரிபொருள் விலையில் ஏற்றம் காணுவதற்கு காரணமாக இருக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான சேவை மற்றும் VAT வரி மாறுபடுவதால், விலை மாற்றத்திலும் சேஞ்ச் இருக்கிறது

Listen to the latest songs, only on JioSaavn.com