LPG கட்டணம் மீண்டும் உயர்ந்தது- ஆகஸ்டிலிருந்து எவ்வளவு விலை உயர்வு தெரியுமா..?

LPG Price: தற்போது மத்திய அரசு, ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு, 14.2 கிலோ எடை கொண்ட 12 எல்பிஜி சிலிண்டர்களை மானிய விலையில் அளித்து வருகிறது

LPG கட்டணம் மீண்டும் உயர்ந்தது- ஆகஸ்டிலிருந்து எவ்வளவு விலை உயர்வு தெரியுமா..?

LPG Price Today: கொல்கத்தா மற்றும் சென்னை நகரங்களில், மானியமில்லா எல்பிஜியின் விலை முறையே 21.5 மற்றும் 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரான எல்பிஜியின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அப்படி உயர்த்தப்பட்ட விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ச்சியாக 5வது மாதமாக எல்பிஜியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி மற்றும் மும்பையில் மானியத்தில் வராத எல்பிஜி சிலிண்டர்களின் விலை முறையே 19 மற்றும் 19.5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளன. இது குறித்தத் தகவலை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தந்துள்ளது. இண்டேன் என்கிற பெயரின் கீழ் ஐஓஎல், எல்பிஜி சிலிண்டர்களை சப்ளை செய்து வருகிறது. 

தற்போது உயர்த்தப்பட்டுள்ள விலையின்படி, டெல்லியில் எல்பிஜியின் விலை 714 ரூபாயாகவும், மும்பையில் 684.50 ரூபாயாகவும் இருக்கும். டிசம்பரம் மாதம் இந்த இரு நகரங்களில் எல்பிஜி விலை, முறையே 695 ரூபாயாகவும், 665 ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

LPG gas rate Delhi, LPG gas rate Delhi, LPG gas rate India, LPG rate Delhi, LPG gas rate Delhi, LPG rate India, cooking gas rate Delhi, Cooking gas rate India, cooking gas price Delhi, cooking gas price India,

கொல்கத்தா மற்றும் சென்னை நகரங்களில், மானியமில்லா எல்பிஜியின் விலை முறையே 21.5 மற்றும் 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நகரங்களிலும் எல்பிஜியின் விலை இனி முறையே 747 மற்றும் 734 ரூபாயாக இருக்கும்.  

LPG Price In Metros With Effect From January 1, 2020

MetroNon-Subsidised LPG Price In Rupees Per 14.2 KG Cylinder
JanuaryDecember
Delhi714695
Kolkata747725.5
Mumbai684.50665
Chennai734714
(Source: iocl.com)

டிசம்பர் 1 ஆம் தேதி முதல், 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள், டெல்லியில் 1,241 ரூபாய்க்கும், மும்பையில் 1,190 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகின்றன. 

அதேபோல 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் டெல்லி மற்றும மும்பையில் முறையே 24.28 சதவிகித மற்றும் 25.25 சதவிகித விலை உயர்வைக் கண்டுள்ளன. 

cooking gas rate India, cooking gas rate Delhi, cooking gas rate Mumbai, LPG gas price India, LPG gas price Delhi, LPG gas price Mumbai, LPG rate in India

(LPG Gas Prices: ஒவ்வொரு மாதமும் எல்பிஜி விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது)

தற்போது மத்திய அரசு, ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு, 14.2 கிலோ எடை கொண்ட 12 எல்பிஜி சிலிண்டர்களை மானிய விலையில் அளித்து வருகிறது. இதைத் தவிர கூடுதலாக சிலிண்டர் தேவைப்பட்டால், மானியம் இல்லாமல்தான் வாங்க வேண்டும். இந்த 12 சிலிண்டர் மானியக் கணக்கும் மாதத்திற்கு மாதம் வேறுபடும். 

Listen to the latest songs, only on JioSaavn.com