இன்று முதல் எல்பிஜி விலை குறைப்பு: விவரங்கள் விரிவாக

கடந்த பிப்ரவரியில் எல்பிஜி சிலிண்டர் விலையானது ரூ 144.5 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. இது 2014 ஜனவரி 4 அன்று உயர்த்தப்பட்ட விலையேற்றத்திற்கு பிறகான, பெரிய விலையேற்றம் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குறிப்பிட்டிருந்தது.

இன்று முதல் எல்பிஜி விலை குறைப்பு:  விவரங்கள் விரிவாக

LPG Gas Prices Today: In metros, the rates were lowered by Rs 53-56.5 per cylinder from March 1

LPG Prices Today: கடந்த ஆறு முறை திருத்தியமைக்கப்பட்ட விலைப்பட்டியலில் சிலிண்டர்விலை 50 சதவிகிதம் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் முதலான இந்த விலை திருத்தங்களில் மார்ச் 1 முதல் பெரு நகரங்களில் இந்த விலை குறைப்பு அமலாக்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட திருத்தங்களில் சிலிண்டர் விலையானது 6 மடங்கு அதிகரிப்பதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை முதல் டெல்லி மற்றும் மும்பையில் 14.2 கிலோ கிராம் கொண்ட சிலிண்டரின் விலையானது தலா 53 ரூபாய் குறைந்திருப்பதாக  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்திருக்கிறது.

மார்ச் 1 நிலவரப்படி, டெல்லி மற்றும் மும்பையில் 14.2 கிலோ கிராம் சிலிண்டர்களின் விலையானது, முறையே 805.5 மற்றும் 776.5 ரூபாயாக இருக்கின்றதாக இந்தியன் ஆயில் நுகர்வோர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். முன்னதாக இதன் விலையானது முறையே 858.5 மற்றும் 829.5 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 19 கிலோ கிராம் சிலிண்டர்களின் விலையானது டெல்லியில் ஒரு யூனிட்டுக்கு முறையே ரூ .1,381.50 ஆகவும் மும்பையில் ரூ .1,331.00 ஆகவும் கணக்கிடப்படுகிறது. முன்னதாக ரூ .1,466.00 மற்றும் ரூ .1,540.50 ஆக இருந்த விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயிலின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LPG Cylinder Price In Metros 

CityNon-Subsidised LPG Price In Rupees Per 14.2 KG Cylinder
With Effect From March 1Existing
Delhi805.5858.50
Kolkata839.5896.00
Mumbai776.5829.50
Chennai826881.00
(Source: iocl.com)

LPG rate hike, LPG price hike, LPG cylinder rate hike, LPG cylinder rate hike, cooking gas rate India, cooking gas rate Delhi, cooking gas rate Mumbai, LPG gas price India, LPG gas price Delhi, LPG gas price Mumbai, LPG rate in India

(LPG Gas Prices: Suppliers such as Indian Oil review cooking gas rates on a monthly basis)

Also from March 1, the prices of 19-kilogram cylinders were revised to Rs 1,381.50 per unit in Delhi and Rs 1,331.00 in Mumbai, from Rs 1,466.00 and Rs 1,540.50 respectively, according to data from Indian Oil.

0icvdipg

மார்ச் மாதத்தில் விகிதங்களின் விலை குறையக்கூடும் என்றும், பிப்ரவரி மாதத்தில் இந்த உயர்வு சர்வதேசச் சந்தையின் காரணமாக இருக்கலாம் என்றும் எண்ணெய் வள துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய சில நாட்களுக்குப் பிறகு எல்பிஜி விலையில் ஓரளவு நிவாரணம் கிடைக்கிறது. "அடுத்த மாதம் விலைகள் குறையக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன" என்று அமைச்சர் பிப்ரவரி 19 அன்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரியில் எல்பிஜி சிலிண்டர் விலையானது ரூ 144.5 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. இது 2014 ஜனவரி 4 அன்று உயர்த்தப்பட்ட விலையேற்றத்திற்கு பிறகான, பெரிய விலையேற்றம் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குறிப்பிட்டிருந்தது.

தற்போது, ​​ஒரு வீட்டிற்கு தலா 14.2 கிலோ கிராம் 12 சிலிண்டர்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் என அரசாங்கம் வழங்கும் மானியத்தின் அளவு மாதத்திற்கு மாதம் மாறுபடும். இந்த மாறுபாடானது சர்வதேச அளவில் எல்பிஜியின் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

Listen to the latest songs, only on JioSaavn.com