வீட்டு உபயோகத்திற்கான மானியமில்லா சிலிண்டரின் விலை கடும் உயர்வு!

எரிவாயு சிலிண்டரின் இன்றைய விலை: கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை ஆறு முறை சிலிண்டர் விலை உயர்ந்து ரூ.284 வரை அதிகரித்துள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான மானியமில்லா சிலிண்டரின் விலை கடும் உயர்வு!

Latest LPG Rates: பெரும் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் முதல் 6 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.147 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கும் வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை ஆறு முறை சிலிண்டர் விலை உயர்ந்து ரூ.284 வரை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் மானியமில்லாத வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.881க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பிப்ரவரி 12, 2020 முதல் பெரும் நகரங்களில் மானியமில்லா சிலிண்டரின் விலை

Metro14.2 கிலோ மானியமில்லா சிலிண்டர் விலை
பிப். 12 முதல் விலைபழைய விலை
டெல்லி858.50714.00
கொல்கத்தா896.00747.00
மும்பை829.50684.50
சென்னை881.00734.00
(Source: iocl.com)

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் வலைதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்றைய தினம் வரை இரண்டு பெரும் நகரங்களில் ரூ.714 மற்றும் ரூ.684 வரையே எரிவாயு சிலிண்டரின் விலை இருந்தது. 

இந்நிலையில் இன்றைய தினம் சென்னையில் ரூ.147 உயர்ந்து தற்போது ரூ.881க்கு ஒரு சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கொல்கத்தாவில் ரூ.149 உயர்ந்து தற்போது ரூ.896க்கு ஒரு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த சில மாதங்களில் மட்டும் விலை உயர்வு

14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையானது மும்பை மற்றும் டெல்லியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை ஆறு முறை உயர்ந்து ரூ.284 வரை அதிகரித்துள்ளது. 

3umcmck


இந்த மாதம் 19கிலோ எடை கொண்ட வணிக பயண்பாட்டுக்கான சிலிண்டர் டெல்லியில் ரூ.1,190க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இனி ரூ.1.466க்கு விற்பனை செய்யப்படும். இதேபோல், மும்பையில், ரூ.1.241க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இனி ரூ.1,540க்கு விற்பனை செய்யப்படுகிறது என இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LPG rate hike, LPG price hike, LPG cylinder rate hike, LPG cylinder rate hike, cooking gas rate India, cooking gas rate Delhi, cooking gas rate Mumbai, LPG gas price India, LPG gas price Delhi, LPG gas price Mumbai, LPG rate in India

(LPG Gas Prices: இந்தியன் ஆயில் போன்ற சப்ளையர்கள் சமையல் எரிவாயு விகிதங்களை மாதாந்திர அடிப்படையில் மதிப்பாய்வு செய்கிறார்கள்)

தற்போது மத்திய அரசு 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபோயகத்திற்கான 12 சிலிண்டருக்கு மானியம் வழங்கி வருகிறது. இந்த எண்ணிக்கையை தாண்டி சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்கள் சந்தை விலையை செலுத்தி வாங்க வேண்டும்.