This Article is From Jul 06, 2020

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மானியமில்லா LPG சிலிண்டரின் விலை உயர்வு!

LPG Price Today: ஜூலை 1ம்தேதி முதல் இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் டெல்லி மற்றும் மும்பையில், தற்போது மானியமில்லா சிலிண்டருக்கு ரூ.594 செலுத்த வேண்டும்.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மானியமில்லா LPG சிலிண்டரின் விலை உயர்வு!

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மானியமில்லா LPG சிலிண்டரின் விலை உயர்வு!

LPG Cylinder Price: பெருநகரங்களில் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.4.50 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலாகிறது. அதன்படி, டெல்லியில் மானியமில்லா சிலிண்டரின் விலை ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் ரூ.4.50 வரை உயர்ந்துள்ளது. மும்பையில் ரூ.3.50 வரை உயர்ந்துள்ளது. சென்னையில், ரூ.4 வரை உயர்ந்துள்ளது என இந்தியன் ஆயில் கார்பரேஷன் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மிகப்பெரிய எரிப்பொருள் சில்லறை விற்பனையாளரான இந்தியன் ஆயில் இண்டேன் என்ற பெயரில் சமையல் எரிவாயுவையும் விநியோகித்து வருகிறது.

நான்கு பெருநகரங்களில் இண்டேன் LPG சிலிண்டரின் விலை விவரம்: 

CityPrice In Rupees Per 14.2 KG Cylinder
With Effect From June 1Existing
டெல்லி594.00593.00
கொல்கத்தா620.50616.00
மும்பை594.00590.50
சென்னை610.50606.50
(Source: iocl.com)

ஜூலை 1ம்தேதி முதல் இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் டெல்லி மற்றும் மும்பையில், தற்போது மானியமில்லா சிலிண்டருக்கு ரூ.594 செலுத்த வேண்டும். 

LPG price today, LPG price alert, LPG Gas Cylinder, LPG Gas, Cooking Gas Price Hike, Cooking Gas Cylinder, LPG price today, LPG rate today, LPG rate, LPG gas, LPG cylinder rate, LPG cylinder price, LPG subsidy, LPG rate, LPG price

(ஜூன்.1ம்தேதி விலை உயர்வதற்கு முன்பு தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு விலை குறைந்து வந்தன.) 

தற்சமயம் அரசு மானியத்துடன் ஒரு வருடத்திற்கு 12 சிலிண்டர்களை வழங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து, வாங்கும் சிலிண்டர்களுக்கு வாடிக்கையளர் சந்தையை விலையை செலுத்த வேண்டும். இதேபோல், 12 சிலிண்டருக்கான மானியத் மாதத்திற்கு மாதம் கச்சா எண்ணெய் விலை, அந்நிய செலாவணி மதிப்பை பெருத்தும் இந்த மானிய தொகை மாறுபடும். 
 

.