This Article is From Jul 05, 2019

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆதாயத்தை இழந்தன, யெஸ் பேங்க் 6 சதவீதம் சரிந்தன

Budget 2019: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்துள்ளன. ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், லார்சன் & டூப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலிவர் மற்றும் கோட்டாக் மஹிந்திர பேங்க் ஆகியவை ஆதாயத்தை பெற்றன. சென்செக்ஸ் 124 புள்ளிகள் அதிகரித்து 40,031.81 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 11,982 புள்ளிகளில் உள்ளது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆதாயத்தை இழந்தன, யெஸ் பேங்க் 6 சதவீதம் சரிந்தன

ஏற்ற இறங்கத்துடன் இன்று பங்குச் சந்தை இருக்கும்

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்  மற்றும் நிஃப்டி முன்னேற்றத்துடன் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மோடியின் 2.0 அரசின் முதல் பட்ஜெட் இன்றுதாக்கல் செய்யப்படவுள்ளது.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பலரும் பட்ஜெட்டை எதிர்பார்த்து உள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தி கொள்கைகள் வகுக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இன்று பங்குச்சந்தை நிஃப்டி 11,700- 12,100 வரை உயரலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். 

காலை 11:07  மணியளவில் கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 2.75 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. ஓரிரு ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறக்கூடிய திறன் கொண்டது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் பேசினார். 

10 ஆண்டு  கால அவகாசம் கொண்ட அரசாங்க பாண்டு பத்திரங்கள் 6.8914 சதவீதம் ஆதாயத்தை அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்துளது டாலருக்கு ரூ.68.6075 ஆக உள்ளது.

காலை 10:55 மணியளவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தட்டையான குறிப்புகளுடன் வர்த்தகம் நடைபெறுகிறது. அரசின் பட்ஜெட் அறிவிப்புகளை எதிர்பார்த்து உள்ளன. காலை 10:54 மணியளவில் சென்செக்ஸ் 18 புள்ளிகள் அதிகரித்து 39,386  மற்று தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 3 புள்ளிகள் அதிகரித்து 11,943 புள்ளிகளில் உள்ளது.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்துள்ளன. ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், லார்சன் & டூப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலிவர் மற்றும் கோட்டாக் மஹிந்திர பேங்க் ஆகியவை ஆதாயத்தை  பெற்றன. சென்செக்ஸ் 124 புள்ளிகள் அதிகரித்து 40,031.81 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 11,982 புள்ளிகளில் உள்ளது.

.